'இது கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்ல...' 'ரொம்ப தப்பான வழியில போய்கிட்டு இருக்கு...' இப்போ 'அவங்க' பண்ண வேண்டியது 'அது' மட்டும் தான்...! - சவுதி அமைச்சர் கருத்து...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக புகழ் பெற்ற ஜெருசலேம் நகரத்தை தனதாக்கி கொள்ள இஸ்ரேல் போராடி வரும் நிலையில் பல மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இஸ்ரேல் அரசு மற்றும் பாலஸ்தீனம் என இரு தரப்பினருக்கும் ஜெருசலேம் நகரத்தை உரிமை கொண்டாடும் விவகாரத்தில், மீண்டும் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள நிலையில் காசா பகுதியையும் கைப்பற்றும் பணியில் இஸ்ரேல் அரசு இறங்கியுள்ளது.
இதன் காரணமாக காசா போராளிகள் மற்றும் இஸ்ரேல் அரசு மாறி மாறி ஏவுகணைகளை வீசி விளையாடி வருகின்றனர். இதில், பொதுமக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலால் காசா மக்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளனா். இதனால் அங்கு போர் பதற்றம் உருவாகியுள்ளது. உலகையே திரும்பி பார்க்க செய்த இந்த தாக்குதலை இஸ்ரேலும் காசாவும் தங்களுக்கான சண்டையை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பல வலியுறுத்தியுள்ளபோதிலும் மோதல் தொடா்ந்து வருகிறது.
இதுவரை இஸ்ரேல்-பாலஸ்தீன தாக்குதலில், இஸ்ரேலின் செலுத்திய குண்டுவெடிப்பில் சிக்கி 63 குழந்தைகள் உட்பட 217 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஒரு வாரத்தில் 1,400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான நூலகம், கல்வி மையங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
இஸ்ரேல்-காசா மோதல் குறித்து சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், 'இரு நாடுகளுக்குகிடையே நடந்து வரும் இந்த சம்பவங்கள் அனைத்தும் முற்றிலும் தவறான திசையில் சென்று கொண்டிருகின்றன. இஸ்ரேல்-காசாவில் நிகழும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நாம் ஒரு நிலையான சமாதானத்தை நோக்கி பாதையை அமைக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் சமாதானமாக செல்வதை ஊக்குவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
