'மூணு நாளா அழுதிட்டு இருக்கேன்...' கழட்டி விட்டும் நீ ஜாலியா இருக்க...' 'இறக்குடா 1000 கிலோ வெங்காயம்...' காதலி செய்த வேற லெவல் சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | May 20, 2020 04:07 PM

காதலித்து கைவிட்ட நபர் கவலை அடையவில்லை என்று தெரிந்த சீனப்பெண் ஒருவர் தன் காதலன் வீட்டிற்கு டன் கணக்கில் வெங்காயத்தை அனுப்பி, ஒரு கடிதத்தையும் அனுப்பிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

chinese girl sends 1000 kilo onion to her ex boyfriend home

இந்தியா உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் பிப்ரவரி 14 ஆம் நாள் தான் காதலர்கள் தினமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் சீனாவில் இன்று அதாவது அவர்களுடைய கால அளவை ஒப்பிட்டு பார்க்கும் போது, நாளை மே 20 ந்தேதி காதலர் தினம் ஆக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் காதலித்து ஏமாற்றிய தன்னுடைய முன்னாள் காதலனுக்கு, காதல் பரிசாக அவரின் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி வைத்துள்ளார் ஒரு இளம்பெண்.

சீனாவில் ஷாண்டோங் மாநிலத்தை சேர்ந்த ஜாவோ, சில மாதங்களாக காதலில் இருந்துள்ளார். இந்நிலையில் வரும் மே 20 அன்று தன்னுடைய முதல் காதலர் தினத்தை தன் காதலனுடன் கொண்டாடலாம் என நினைத்தும் உள்ளார். ஆனால் துருத்தஷ்ட வசமாக ஜாவோவை அவருடைய காதலர் ஏமாற்றிவிட்டார்.

தனது காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ஜாவோவிற்கு கண்ணீர் துளிகளே மீந்தது. வருத்தத்தில் மூன்று நாட்களாக கண்ணீர் விட்டு அழுத ஜாவோவிற்கு, இந்த காதல் பிரிவு அவரின் காதலருக்கு வேதனையை தரவில்லை என தெரியவர, கடும் கோபம் ஏற்பட்டதுள்ளது.

இதனால் உடனடியாக சுமார் 1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து அதனை தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் ஒரு கடிதத்தையும் சேர்த்து அனுப்பியுள்ளார். அதில், கடந்த மூன்று நாட்களாக நான் அழுதேன், இனி அழவேண்டியது உன்னுடைய முறை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ஜாவோவின் காதலன் 1000 கிலோ வெங்காயத்தை பார்த்து தலை சுத்தி நிற்கும் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி உள்ளது.

அதில் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார் அவர். அந்த கடிதத்தில், நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்போது உன்னுடைய முறை என்று எழுதப்பட்டிருந்தது. வெங்காயத்திலிருந்து வரும் நாற்றம் தாங்க முடியவில்லை என்று அந்த நபரின் அக்கம் பக்கத்து வீட்டார் குறை கூறி வருகின்றனர்.