இறக்கை மட்டுமே 30 அடி.. "உலகத்தின் முதல் பறவை அதுதானா?".. ஆய்வாளர்கள் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்அர்ஜென்டினாவில் மிகப்பெரிய பறவை ஒன்றின் படிமங்களை அந்நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகின் முதல் பறவை
86 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த "டெத் ஆஃப் டிராகன்" என்னும் பிரம்மாண்ட பறவையின் எலும்புகளை கண்டறிந்துள்ளனர் அர்ஜென்டினாவை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். ஊர்வன வகையை சேர்ந்த இந்த பறவைகளின் இறக்கை 30 அடி இருந்திருக்கலாம் எனக்கூறும் ஆய்வாளர்கள், 9 மீட்டர் நீளம்கொண்ட இந்த உயிரினம் உலகின் முதல் பறவை இனமாக இருக்கக்கூடும் என்கிறார்கள். மேலும், இவை டைனோசர் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
புதிய மைல்கல்
அர்ஜென்டினாவின் ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள வடக்கு மெண்டோசா மாகாணத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இந்த உயிரினத்தின் எலும்புகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள பாறைகளுக்கு நடுவே ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது அவை கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிஸ் மலைத்தொடரில் Thanatosdrakon பகுதியில் இந்த ஆராய்ச்சியில் இறங்கிய குழுவின் தலைவர் லியனார்டோ ஆரிட்ஸ் இதுபற்றிப் பேசுகையில்,"இது வரலாற்றின் முக்கிய மைல்கல் ஆகும். இதுபோன்ற ஒன்றை நாங்கள் கண்டதில்லை. கிரேக்க மொழியில் Thanatos என்பதற்கு இறப்பு (death) என்று பொருள். டிராகனை கிரேக்கர்கள் drakon என்று அழைத்திருக்கின்றனர். ஆகவே இந்த பறவைக்கு dragon of death எனப் பெயரிடப்பட்டுள்ளது" என்றார்.
மிகப்பெரிய உயிரினம்
கிரெட்டேசியஸ் ரிசர்ச் என்ற அறிவியல் இதழில் கடந்த ஏப்ரலில் தங்கள் ஆய்வை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள், "தென் அமெரிக்காவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய புதைபடிவ எலும்புக்கூடுகள் இவை. இதுபோன்ற உடலமைப்பை கொண்ட உயிரினங்கள் எந்த உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற தரவுகள் தற்போது எங்களிடத்தில் இல்லை" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
அர்ஜென்டினாவில் 86 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பிரம்மாண்ட உயிரினத்தின் எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பது தொல்பொருள் ஆராய்ச்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
