கூகுளுக்கே அல்வா கொடுத்த வெப் டிசைனர்...! 'சரி அப்படி என்ன தான் ஆகுதுன்னு சும்மா ட்ரை பண்ணி பாப்போம்...' - பதறிப் போன கூகுள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக செர்ச் எஞ்சின் மார்க்கெட் பங்கில் 86%க்கும் அதிகமானவற்றைக் கொண்ட கூகுள், உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் தேடுபொறியாக இருக்கிறது.

அதோடு கூகுள் டொமைன் பெயரை (Google domain name), உயர்மட்ட பாதுகாப்பு காரணமாக எவரும் அதை எளிதாக வாங்கவோ தவறாக பயன்படுத்தவோ முடியாது. என்னதான் இருந்தாலும் கூகுள் டொமைன் பெயரையும் 30 வயது இளைஞர் ஒருவர் வாங்கியுள்ள சம்பவம் கூகுளுக்கே அல்வா கொடுத்த கதையாக மாறியது.
இதுகுறித்து கூறிய அர்ஜென்டினாவை சேர்ந்த 30 வயது மிக்க வெப் டிசைனர் ஆன குரோனாவால் கூறும் போது, 'நான் எனது ப்ரவுஸரில் www.google.com.ar-ஐ டைப் செய்தேன், அது வேலை செய்யவில்லை. என்னடா இது விசித்திரமான ஒன்று நடக்கிறது என தொடர்ந்து பார்க்கும் போது கூகுளின் URL, google.com.ar-ஐ அவர் தேடியபோது, அந்த டொமைன் பெயர் வெறும் 70 பெசோஸ்-க்கு கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
சரி,நம்மால் முடிந்தால் வாங்கலாம் என http://google.com.ar இலிருந்து டொமைனை வெறும் 70 பெசோஸ்க்கு வாங்கினேன். இதை ட்விட்டரிலும் போட்டேன். நான் ஒருபோதும் மோசமான நோக்கங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் அதை வாங்க முயற்சித்தேன், என்.ஐ.சி என்னை அனுமதித்தது' என்றும் அவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
கூகுள் டொமைனை வங்கியிருந்தாலும் வெறும் அரை மணி நேரத்தில் மீண்டும் கூகுளின் கட்டுப்பாட்டுக்கு சென்றது.
Quiero aclarar que entre a https://t.co/XtzUy8WL36 vi el nombre de https://t.co/cK20BdyuxB disponible y lo compre legalmente como corresponde!
— Nicolas David Kuroña (@Argentop) April 22, 2021

மற்ற செய்திகள்
