'ஆராய்ச்சி'யில் கிடைத்த மனித உடல் எச்சங்கள்... "'2,000' வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்தவங்க... இப்டி தான் 'இறந்து' போயிருக்காங்க..." வெளியான 'வியக்க' வைக்கும் 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ரோம பேரரசின் பாம்பேய் (Pompeii) நகரத்தை அழித்த வெசுவியஸ் என்ற எரிமலையில் சிக்கி உயிரிழந்த இரண்டு மனிதர்களின் உடல் எச்சங்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த இரு உடல்களை அக்காலத்தில் எஜமான் - அடிமையாக வாழ்ந்திருக்கலாம் என பாம்பேய் தொல்பொருள் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த இருவரும் எரிமலை வெடித்து சிதறிய போது ஒளிந்து கொள்ள இடம் தேடி, அப்போது எரிமலை குழம்பால் அடித்து செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என பாம்பேய் தொல்பொருள் பூங்காவின் இயக்குநர் மாசிமோ ஒசன்னா கூறுகிறார்.
கி.பி 79 இல் எரிமலை சீற்றத்தால் மொத்த பாம்பேய் நகரமும் மூழ்கியது. இதில் அங்கிருந்த குடிமக்கள் அனைவரும் உயிரிழந்த நிலையில், அந்த நகரம் முழுவதும் சாம்பலில் புதைந்து போனது. அந்த இடம் தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆய்வு செய்வதற்கான இடமாக மாறியுள்ளது.
அப்பகுதியிலுள்ள பெரிய மாளிகை ஒன்றை அகழ்வாராய்ச்சி செய்த போது தான், இந்த இரண்டு எச்சங்களையும் கண்டெடுத்தனர். புதைந்து போன அந்த செல்வந்தருக்கு 30 முதல் 40 வயது இருக்கலாம் என்றும், அவரது கழுத்தின் கீழ் கம்பளி ஆடையின் தடயங்கள் காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
அதே போல, மற்றொரு மனிதரின் வயது 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'இது வெப்ப அதிர்ச்சியால் ஏற்பட்ட மரணம். இறுகி போயிருக்கும் அவரின் கை மற்றும் கால்கள் அதை நிரூபிக்கின்றன. எரிமலை சீற்றம் நடந்ததற்கான வியக்க வைக்கக்கூடிய மற்றும் அசாதாரண சாட்சியம் இது' என ஒசன்னா கூறியுள்ளார்.
நேபிள்ஸ் என்ற இடத்திற்கு அருகிலுள்ள அகழ்வாராய்ச்சி தளத்தில், தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
