நடு பாலைவனத்துல சவூதி அரேபியா செய்ய இருக்கும் அற்புதம்.. 75 மைல் நீளமாம்.. செலவை கேட்டாலே தலை சுத்திடும்போலயே..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாலைவனத்தில் சுமார் 120 கிலோமீட்டர் நீளத்துக்கு பிரம்மாண்ட கட்டிடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியா.

எண்ணெய் வளம் மிக்க பிரதேசங்களில் முக்கியமானது சவூதி அரேபியா. நாடு முழுவதும் பாலைவனம் தான் என்றாலும் அதனை சோலைவனமாக மாற்ற அந்நாட்டு அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு இளவரசர் சல்மான் இதற்காக முக்கிய திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் அறிவித்துள்ள திட்டம் தான் இந்த 'Mirror Line' எனும் பிரம்மாண்ட திட்டம்.
1 ட்ரில்லியன் டாலர்
சவூதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தபூக் மாகாணத்தில் இந்த கட்டிடம் எழுப்பப்பட இருக்கிறது. சுமார் 75 மைல் நீளத்துக்கு இருபுறத்திலும் கண்ணாடி அமைக்கப்பட உள்ள இந்த கட்டிடம் சுமார் 50 லட்சம் பேருக்கு வசிப்பிடமாக இருக்கும் எனவும் சவூதி அரசு தெரிவித்திருக்கிறது. இதற்காக 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 766 பில்லியன் ருபாய்) ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதில் உள்ள கட்டிடங்கள் அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்பையர் ஸ்டேட் கட்டிடங்களை விட உயரமானதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பாலைவனத்தில் ஒன்றோடொன்று இணையாக 1,600 அடி உயரமுள்ள இரண்டு கட்டிடங்களைக் கொண்டிருக்கும். இதனை கட்டுவதற்கு 50 ஆண்டுகள் ஆகும். பூமியின் வளைவை கணக்கில் கொண்டே இந்த கட்டிட பணிகள் நடைபெற இருக்கின்றன. மேலும், இதனுள் ஏகப்பட்ட சொகுசு அம்சங்களும் இடம்பெற இருக்கின்றன.
ரயில்
இந்த கட்டிடங்களில் வசிக்க இருக்கும் மக்கள் 20 நிமிடத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு சென்றுவர சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உள்ளே சொகுசு படகுகளை கொண்டுசெல்லவும் நீர்ப்பாதைகள் அமைக்கப்பட இருக்கின்றன. இதன் உள்ளே வசிப்பவர்களுக்கு இந்த கட்டிடத்திலேயே உணவு கிடைக்கும் வகையில் வேளாண்மை பணிகளும் மேற்கொள்ளப்பட இருக்கிறதாம். மேலும், 1000 அடி நீளமுள்ள விளையாட்டு திடலும் இதன் உள்ளே அமைக்கப்பட இருக்கிறது.
எகிப்தின் பிரமிடுகளை போல, இந்த கட்டிடம் சவூதி அரேபியாவின் முக்கிய சின்னமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அந்நாட்டு இளவரசர் சல்மான்.

மற்ற செய்திகள்
