'20 நாடுகளின் பட்டியல்'... 'சவுதி அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு'... கவலையில் இந்திய தொழிலாளர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து வரும் மக்களுக்குச் சவுதி அரசு தடை விதித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்குச் சவுதி செல்வதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படுகிறது. சவுதி அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா, அர்ஜெண்டினா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, அமெரிக்கா, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, பாகிஸ்தான், பிரேசில், போர்ச்சுக்கல், பிரிட்டன், துருக்கி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், லெபனான், எகிப்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது.
சவுதி அரேபியாவில் கரோனா வைரசால் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். எனவே கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் சவுதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியர்கள் நுழையத் தடை விதித்ததற்கான ஆணையை ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சவுதி அனுப்பி உள்ளது.
இந்தியாவிலிருந்து பலபேர் சவுதியில் பல்வேறு வேளைகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்குச் சவுதி அரசின் அறிவிப்பு கவலையை அளித்துள்ளது.

மற்ற செய்திகள்
