ரயில் ஓட்டுநர் பணிக்கு 30 பெண்கள் தேவை.. மலைபோல் குவிந்த விண்ணப்பம்.. அசந்து போன சவுதி அரேபியா!
முகப்பு > செய்திகள் > உலகம்சவுதி அரேபியாவில் ஓட்டுநர் பணிக்காக பெண் ஓட்டுநர்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சவுதி அரேபியா நாட்டில் இதுபோன்ற பணிகளுக்கு பெண்களை பணியமர்த்த காலி பணியிடங்கள் அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். அந்நாட்டில் திருமணம், குடும்பம், விவாகரத்து மற்றும் குழந்தைகள் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் பெண்களும் தொடர்ந்து பாகுபாடுகளை எதிர்கொள்வதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். இளவரசர் முகமது பின் சல்மானின் வருகைக்கு பின்பு நாட்டில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்கள்
சவூதி அரேபியாவில் பெண்களுக்கான பணிகள் ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்பதாக மட்டும் இருந்த நிலையில், சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு வரை, சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி 16ம் தேதியன்று ஸ்பெயினைச் சேர்ந்த ரயில்வே நிறுவனமான ரென்ஃபே இந்த விண்ணப்பங்களை பரிசீலித்தது. விண்ணப்பம் செய்துள்ள பெண்களின் கல்வித் தகுதி ஆன்லைனின் சரிபார்க்கப்பட்டு, அவர்களது ஆங்கில மொழிப் புலமையும் சோதனையிடப்படும்.
ரயில் ஓட்டுநர் பணி
இதனால் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சுமார் பாதியளவு குறையும் எனவும், எஞ்சியிருக்கும் விண்ணப்பங்கள் மீது வரும் மார்ச் மாத இறுதிக்குள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் எனவும் ரென்ஃபே நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பணிக்காக 30 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மெக்கா, மதினா ஆகிய நகரங்களுக்கு இடையில் புல்லட் ரயில்களை இயக்குவர். இதற்கு முன்பாக அவர்களுக்கு ஒரு ஆண்டு முழுவதும் சம்பளத்துடன் பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் வழங்குவதாகக் கூறும் ரென்ஃபே நிறுவனம் தற்போது அதன் ரயில்களை இயக்குவதற்காக சவூதி அரேபியாவில் 80 ஆண்களை நியமித்துள்ளது. மேலும், 50 ஆண்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலை போல் குவிந்த விண்ணப்பம்
இருப்பினும்30 காலிப் பணியிடங்களை கொண்ட ஒரு பணிக்கு 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளது அந்நாட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சவூதி அரேபியாவின் தொழிலாளர்களுள் பெண்களின் பங்கேற்பு சுமார் இரண்டு மடங்காக மாறி, 33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் போது வெளியிடப்பட்ட தரவுகளில், சவூதி அரேபியாவில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் பாதியாக இருப்பதாகவும், 34.1 சதவிகிதம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
