ஒரு வைரக்கல்லினால் இரு நாடுகளுக்கு இடையே இருந்த 30 வருட பகை.. எப்படி எல்லாத்தையும் மறந்து ஃப்ரண்ட்ஷிப் ஆயிட்டாங்க?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jan 27, 2022 01:24 PM

சவூதி அரேபியா: வைரக்கல் திருடிய விஷயத்தில் சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து தாய்லாந்தை சவூதி அரசு மன்னித்து நட்புக்கரம் நீட்டியுள்ளது.

Saudi apologized to Thailand 30 years later stealing diamond

வைரக்கல் கொள்ளை:

கடந்த 1989ஆம் ஆண்டு, சவூதி இளவரசரின் அரண்மனையில் பணிபுரிந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த வாயிற்காவலர் ஒருவர் அரண்மனையில் இருந்த சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான 50 காரட் நீல வைரக்கல்லை கொள்ளையடித்து தாய்லாந்து சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த சவூதி அரசு வைரக்கல்லை திருப்பி கொடுக்குமாறு தாய்லாந்து அரசுக்கு பல அறிக்கைகள் விடுத்தது.

Saudi apologized to Thailand 30 years later stealing diamond

யாரும் கைது செய்யப்படவில்லை:

ஆனால், அந்த அறிக்கைகள் எதையுமே தாய்லாந்து அரசு கண்டுகொள்ளவில்லை. சவூதி அரசு தங்களது கண்டனங்களையும் தெரிவித்தது. மேலும், வைரக்கல்லை திரும்பி தரக் கோரிக்கை விடுத்த 3 சவூதி அரசு அதிகாரிகள் பாங்காக்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நாள் வரையிலும் அந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.

வீடெல்லாம் பெருசா தான் இருக்கு.. ஆனா டாய்லெட் மட்டும் ஏன் இப்படி கட்டினாங்க? குழம்பி தவிக்கும் நெட்டிசன்கள்

தாய்லாந்து முஸ்லிம்கள் மெக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை வருவது தடை:

இதன் காரணமாக சவூதி அரசு தாய்லாந்து நாட்டினருக்கு விசா வழங்குவது, தாய்லாந்து முஸ்லிம்கள் மெக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை வருவது ஆகியவற்றை தடை செய்தது. பல ஆண்டுகளாக தொடர்ந்த இந்த பனிப்போர் தற்போது தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஒச்சாவின் சவூதி வருகையால் முடிவுக்கு வந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

Saudi apologized to Thailand 30 years later stealing diamond

சவூதி அரசு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை:

ஏனென்றால், தாய்லாந்து பிரதமர் பிரயூத் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பில் பழைய பகைமையை மறந்து, இரு நாடுகளின் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் நடவடிக்கைகளை ஊக்குவிக்க ஒப்புக் கொண்டதாக சவூதி அரசு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என்னடா இது.. அடுப்புல வைக்காமலே குக்கர்ல விசில் சத்தம் வருது.. திறந்து பார்த்தபோது... ஷாக் ஆன குடும்பம்

Saudi apologized to Thailand 30 years later stealing diamond

கொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்:

அதுமட்டுமில்லாமல், தாங்கள் செய்த தவறுகளுக்கு தாய்லாந்து அரசு மன்னிப்பு கேட்டதோடு 1989-90ஆம் ஆண்டுகளில் நடந்த இந்த கொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : #SAUDI APOLOGIZED TO THAILAND #STEALING DIAMOND #வைரக்கல் #சவூதி அரேபியா #வைரக்கல் கொள்ளை

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Saudi apologized to Thailand 30 years later stealing diamond | World News.