'வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள்'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சவுதி அரேபியா'... இந்தியர்களுக்கு பலனளிக்குமா?
முகப்பு > செய்திகள் > உலகம்சவுதியில் இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவகாரத்தில், அந்நாட்டு அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார சரிவைச் சரி செய்யச் சவுதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அந்நாட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஒப்பந்த கட்டுப்பாடுகளைச் சவுதி அரேபியா தளர்த்தும் என அந்நாட்டின் மனிதவள துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். மார்ச் 2021-ல் நடைமுறைக்கு வரும் இந்த திட்டங்கள் தொழிலாளர்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் படி வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அவர்களுடைய முதலாளிகளின் அனுமதி இன்றி நாட்டை விட்டு வெளியேறும் உரிமை அவர்களுக்குக் கிடைக்கும். சவுதி தொழிலாளர் சந்தையை மேம்படுத்துவதே இந்த நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன் காக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவுதியைப் பொறுத்தவரை இந்தியாவிலிருந்து அதிகம் பேர் அங்கு வேலை செய்து வருகிறார்கள். எனவே இந்த நடவடிக்கை அவர்களுக்குப் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.