பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உலக அளவில் ஏற்பட்ட பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்துருக்கி மற்றும் நியூசிலாந்தை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த ஆறாம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. 7.8 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் மொத்த துருக்கியையும் ஸ்தம்பிக்க செய்திருக்கிறது. துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் காரணமாக இதுவரையில் 35 ஆயிரம் பேர் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் நியூசிலாந்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டின் தலைநகர் வெலிங்டன் அருகே 6.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரக் கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்திருந்தது. ஏற்கனவே நியூசிலாந்தின் ஆக்லாந்து மற்றும் நேப்பியர் போன்ற இடங்களில் கேப்ரியல் புயல் காரணமாக பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் நிலநடுக்கமும் ஏற்பட்டது மக்களை கலக்கமடைய செய்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் முக்கிய தீவான மஸ்பேட்டில் உள்ள உசன் நகராட்சியின் மியாகா கிராமத்தில் இருந்து 11 கிலோமீட்டர் (ஏழு மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலநடுக்கம் 6.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நிலநடுக்கம் பிலிப்பைன்ஸை தாக்கியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. ஆனாலும், நிலநடுக்கம் காரணமாக தொடர் அதிர்வுகள் இருக்கலாம் எனவும் நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
துருக்கி, நியூசிலாந்தை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது உலக மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
