'தோளில் 400 கிலோ எடை'... 'ஜெயிச்சிருவாருன்னு நினைச்ச அடுத்த செகண்ட் நடந்த பயங்கரம்'... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்பளுதூக்கும் வீரர்கள் அதிகமான எடையை அசால்ட்டாக தூக்கும் பல வீடியோகளை நாம் இணையத்தில் பார்த்திருப்போம். அதுபோன்று இந்த வீரரும் எடையைத் தூக்கி போட்டியில் வெல்லப் போகிறார் என நினைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம், காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் அலெக்சாண்டர் செடிக். இவர் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில், 400 கிலோ எடை பிரிவு பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். அலெக்சாண்டர் பார்ப்பதற்கு நல்ல உடல் வலிமையுடன் இருந்ததால் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார் என பலரும் நினைத்தார்கள். இதையடுத்து 400 கிலோ எடையைத் தூக்க முயன்றபோது, திடீரென அவரது முழங்கால் முறிந்தது.
இதைச் சுற்றி நின்ற மற்ற வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் என யாரும் துளியும் எதிர்பார்க்கவில்லை. முழங்கால் முறிந்த அடுத்த கணம் அலெக்சாண்டர் வலியால் கதறித் துடித்தார். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு குவாட்ரைசெப் தசைகள், முழங்கால்களைச் சவ்வுகளை இணைக்க ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு மாதங்கள் முழுமையாக ஓய்வு எடுத்துக்கொள்ள அலெக்சாண்டரை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே அலெக்சாண்டர் மீண்டும் நடக்கும்போது கால்களை வேகமாக அசைக்காமல் நடக்க வேண்டியதிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பழையபடி பளுதூக்க முடியுமா என்பது இரண்டு மாதத்திற்குப் பிறகே தெரியவரும் எனக் கூறியுள்ள மருத்துவர்கள், அவர் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்கள். வீரர்களின் வாழ்க்கையில் இதுபோன்ற விபத்துகள் சகஜம், எனவே அலெக்சாண்டர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி வருவார் என சக வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். விடா முயற்சியும், மன வலிமையும் இருந்தால் எந்த சோதனையையும் எதிர்த்து நிற்கலாம் என்பது நிதர்சனமே.

மற்ற செய்திகள்
