"பூமியை காப்பாத்த செவ்வாய் கிரகத்துல இருந்து வந்திருக்கேன்".. உலகத்தையே அதிர வைக்கும் சிறுவன்.. பரபர பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Nov 17, 2022 05:36 PM

ரஷ்யாவில் வசித்துவரும் சிறுவன் ஒருவன் தான் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமியை காப்பாற்ற வந்திருப்பதாக சொல்லி வருவது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

Russian kid claims he was sent from Mars to save the world

Also Read | மீண்டும் ஆட்டத்தை துவங்கும் மழை.. மணிக்கு 65 கிமீ வரையில் காற்று.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வுமையம்..!

ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியைச் சேர்ந்தவர் போரிஸ் கிப்ரியானோவிச். சிறுவனான போரிஸ் சமீப காலங்களில் சொல்லிய தகவல்கள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன. குறிப்பாக இவரது தாயும் இந்த விநோத கூற்றுகளை நம்புகிறார். அதுமட்டும் அல்லாமல் தனது மகனிடம் சில விசேஷ குணங்கள் இருப்பதாகவும் அவர் நம்புகிறார்.

தி சன் ஊடகத்தில் அவர் இதுபற்றி பேசுகையில்,"எனக்கு பிரசவம் நடந்தபோது வலியே ஏற்படவில்லை. என்னுடைய மகனை என்னிடம் காட்டும்போது அவனது கண்கள் பழுப்பு நிறத்தில் இருந்தன. ஒரு டாக்டராக குழந்தைகள் எப்போதும் பொருட்களை உற்றுக்கவனிப்பது இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால், எனது மகன் என்னை தனது பெரிய பழுப்பு கண்களால் பார்த்தான்" எனக் கூறியிருக்கிறார். மேலும், தனது மகன் ஒரு வயதிலேயே செய்தித் தாள்களை வாசிக்க துவங்கிவிட்டதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.

Russian kid claims he was sent from Mars to save the world

Image Credit: Project Camelot/Youtube

அதுமட்டும் அல்லாமல் சிறுவயதிலேயே தனது மகன் வானவியல் பற்றியும் தெரிந்துகொண்டதாகவும் பல்வேறு கிரகங்களுக்கு பயணிப்பது பற்றியும் அவன் பேசுவதாகவும் சிறுவனின் தாயார் தெரிவித்திருக்கிறார். மேலும், அணுசக்தி போரில் செவ்வாய் கிரகம் தாக்குதல் அடைந்ததால் அதன் மக்கள் நிலத்திற்கு அடியில் வசித்துவருவதாக சிறுவன் கூறியதாக சொல்லப்படுகிறது.

மனித இனம் தன்னைத்தானே அழித்துவிடாமல் காப்பாற்ற பூமிக்கு அனுப்பப்பட்ட "இண்டிகோ சில்ட்ரன்" என்று அழைக்கப்படும் பலரில் தானும் ஒருவர் எனச் சொல்லியிருக்கிறான் சிறுவன். மேலும், லெமூரியன் காலம் துவங்கி பல்வேறு காலகட்டத்தில் தான் பூமிக்கு வந்து சென்றதாகவும் சிறுவன் சொல்லியது பலரையும் அதிர வைத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

Russian kid claims he was sent from Mars to save the world

Image Credit: Project Camelot/Youtube

இதனை தொடர்ந்து தான் விண்கலம் ஒன்றையும் வடிவமைத்ததாக போரிஸ் கூறியதாக தெரிகிறது. உலோகம் மற்றும் காந்த அடுக்குகளை கொண்ட அந்த விண்கலத்தை கொண்டு, பிரபஞ்சத்தில் எங்குவேண்டுமானாலும் பயணிக்கலாம் எனச் சொல்லியிருக்கிறார் போரிஸ். இது இப்படி இருக்க, போரிஸ் தனது தாயுடன் காணாமல்போய்விட்டதாகவும் சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவின் கிராமம் ஒன்றில் அரசின் உதவியுடன் அவர் வாழ்ந்துவருவதாகவும் பின்னர் தகவல்கள் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Also Read | "CSK-வின் அடுத்த கேப்டன் இவருதான்".. ஆருடம் சொன்ன வாசீம் ஜாஃபர்.. தோனியின் இடம் பத்தி சொன்ன தகவலால் பரபரக்கும் ரசிகர்கள்..!

Tags : #RUSSIAN KID #MARS #WORLD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Russian kid claims he was sent from Mars to save the world | World News.