ரஷ்யா - உக்ரைன் போர்.. "அவர்கிட்ட சீக்கிரம் பேசுங்க".. பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைக்கும் அதிகாரிகள்.. என்ன நடக்கிறது டெல்லியில்?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகமே இப்போது ரஷியா - உக்ரைன் போர் குறித்த நடவடிக்கைகளை அச்சத்துடன் கவனித்து வருகிறது. என்ன ஆனாலும் உக்ரைன் மீது போர் தொடுப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின். இதற்காக சுமார் ஒன்றரை லட்சம் ரஷிய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் நாடுகளுக்கு தக்க பதிலடி தரப்படும் எனவும் புதின் எச்சரித்துள்ளார்.
ஜிம்மில் 181 கிலோ வெயிட்டை தூக்கிய இளம்பெண்.. கொஞ்ச நேரத்தில் நடந்த பகீர் சம்பவம்..!
நவீன காலத்தில் மிகப்பெரிய போராக கருதப்படும் இதனை தற்போது துவங்கி பிள்ளையார் சுழி போட்டு வைத்திருக்கிறது ரஷ்யா. சற்று நேரம் முன்னர், உக்ரைன் தலைநகரான கியூ மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், ஒடேசா, கார்கிவ் நகரங்களில் பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.போர் துவங்கி இருப்பதை ஐ.நா.,வுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கில்சிஸ்டியா உறுதி செய்துள்ளார்.
உதவி
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரை கைவிட உலக நாடுகள் உதவிட வேண்டும் என உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷியாவுக்கு ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆலோசனையில் மோடி
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையில், மூத்த மந்திரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தப் போரினால் இந்தியாவிற்கு ஏற்பட இருக்கும் பாதிப்புகள் குறித்தும், உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களின் நிலைமை குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
அவர்கிட்ட பேசுங்க..
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளது.
முன்னதாக, ஐ.நா. பாதுகாப்பு சபை இந்திய பிரதிநிதி திருமூர்த்தி இதுபற்றி பேசுகையில் "உக்ரைன் - ரஷ்யா இடையேயான தற்போதைய சூழல் மிகப்பெரிய ஆபத்திற்கு வித்திடும். உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றமான நிலை கவலையை தருகிறது" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகர்கள் உதவி எண்கள்
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்ப விரும்ப மற்றும் அவசர உதவிகளுக்கு 044-28515288, 96000 23645, 99402 56444 இந்த எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் என அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ் தமிழர்கள் http://nrtamils.tn.gov.in என்ற இணையம் வாயிலாக உதவி கோரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் வாழ் தமிழர்கள் கிழ்கண்ட சமூக வலைதள முகவரின் வாயிலாகவும் உடனடி தகவல்களை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook : https://www.facebook.com/nrtchennai1038
Twitter : @tamiliansNRT
You Tube : Non Resident Tamils Channel
வலிமை படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு.. கோவையில் பரபரப்பு..!