தொடங்கியது ரஷ்யா-உக்ரைன் போர்.. இந்தியாவில் எந்த பொருட்களின் விலை உயர போகுது? நிபுணர்கள் எச்சரிக்கை
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா: ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் இந்தியாவின் விலைவாசியில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
பல வருடங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றிய போது இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்து காணப்பட்டது.
இரு கிளர்ச்சிக் குழுக்கள் ஆட்சி :
அதோடு தற்போது உக்ரைன் நேடா படைகளோடு இணைய முடிவு செய்துள்ள நிலையில் இதை பொறுக்காத ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க முடிவு செய்துள்ளது. அதோடு, கிழக்கு உக்ரைனில் உள்ள டோன்ஸ்டெக் மற்றும் லஹன்ஸ்சக் இருக்கும் மக்களும் உக்ரைனின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டோன்ஸ்டெக் மக்கள் குடியரசு மற்றும் லஹன்ஸ்சக் மக்கள் குடியரசு என்ற இரு கிளர்ச்சிக் குழுக்கள் ஆட்சி செய்து வருகின்றன.
போர் தொடக்கம்:
உக்ரைன் அரசு, இந்த இரு குழுக்களையும் பயங்கரவாத அமைப்பாகவும் அறிவித்துள்ளது. உக்ரைனில் தற்போது எமெர்ஜென்சி அமல்படுத்தபட்டுள்ளது. இந்த நிலையில் போர் தொடங்கியுள்ளதாக தற்போது புடின் அறிவித்துள்ளார். இது இந்தியாவிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்விளைவாக பல பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு:
இதுவரை ரஷ்யா- உக்ரைன் பதற்றம் காரணமாக மட்டுமே பெட்ரோலிய பொருட்களின் விலை கிடுகிடுவென சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 96.7 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் மேல் செல்லக்கூடும். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அதனால் சர்வதேச ஜிடிபி பாதிக்கப்படும்.
மண்ணெண்ணெய் மீதான மானியம் அதிகரிக்கும்
அதன் தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் மீதான மானியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவும் பிரச்சனை நீடித்தால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இருந்தது.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 25 சதவீதத்தை எண்ணெய் கொண்டுள்ளது. இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது.
கோதுமை விலை உயரலாம்:
இதனை தவிர்த்து கோதுமை விலை உயரலாம் எனக் கூறப்படுகிறது. ரஷ்யா உலகின் முதன்மையான கோதுமை ஏற்றுமதியாளராக உள்ளது, உக்ரைன் கோதுமை ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ளது. கோதுமையின் மொத்த உலகளாவிய ஏற்றுமதியில் கிட்டத்தட்ட கால் பங்கை இரு நாடுகளும் கொண்டுள்ளன.
கருங்கடல் பகுதியில் (Black sea) இருந்து தானியங்கள் வருவதில் தடங்கல் ஏற்பட்டால், அது விலைவாசி மற்றும் எரிபொருள் உணவுப் பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
அதோடு, உலோகங்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. ஒரு வேளை ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டால், வாகன தயாரிப்பு மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பல்லேடியம் (palladium,) என்ற உலோகத்தின் விலை சமீபத்திய வாரங்களில் உயர்ந்துள்ளது. பல்லேடியத்தின் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக ரஷ்யா உள்ளது.