Vilangu Others

இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.. ரஷ்யாவுக்கு அமெரிக்கா கொடுத்த வாய்ப்பு.. உக்ரைன் விவகாரத்தில் திருப்பம்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Pandidurai T | Feb 21, 2022 04:11 PM

உக்ரைன் மீதான தாக்குதல் முடிவை கைவிட்டால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

The United States, which gave Russia a chance, ukraine Issue

'நேட்டோ' எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் குரல் கொடுத்து வருகின்றன. ராணுவ வீரர்களையும், போர் விமானங்களையும் அனுப்பி வருகின்றன.

ஜோ பைடன் தொலைபேசியில் அழைப்பு

இந்த பரபரப்பான சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 14ம் தேதி இரவு தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அதில், ரஷ்யா - உக்ரைன் இடையில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண விருப்பம் தெரிவித்த ஜோ பைடன், எந்த சூழல்நிலையையும் எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். உக்ரைன் மீது போர் தொடுத்தால் ஏராளமான மக்கள் உயிரிழக்கக்கூடும் என்றும், அதை மீறியும் போர் தொடுத்தால், அதற்கு ரஷ்யா உரிய விலை கொடுக்க நேரிடும் என்றும், புடினை, நேரடியாகவே பைடன் எச்சரித்தார்.

The United States, which gave Russia a chance, ukraine Issue

உக்ரைன் அதிபர் கோரிக்கை

ரஷ்ய படைகள் குவிப்பு உக்ரைனில் எந்த நேரமும் ரஷ்யா அத்துமீறி தாக்குதல் நடத்தலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் எல்லையில் பெலாரஸ், கிரீமியாவில் எல்லையோர பகுதிகளில் மிகப் பெரிய அளவில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளது தொடர்பான, 'சாட்டிலைட்' படங்கள் வெளியாகின., இந்த பகுதிகளில் தற்காலிக கூடாரங்கள், கட்டடங்கள் அமைத்து, ரஷ்ய ராணுவம் முகாமிட்டுள்ளது. இதனிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  அழைப்பு விடுத்தார்.

வெள்ளை மாளிகை அறிவுப்பு

மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதை முன்மொழிவதாகவும், அதற்கான இடத்தை ரஷ்யாவே தேர்வு செய்யட்டும் என்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  தெரிவித்துள்ளார். இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், "இன்னும் காலம் கடந்து போகவில்லை, ரஷ்யா போரை தவிர்த்துவிட்டு அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரலாம்" என்று பைடன் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The United States, which gave Russia a chance, ukraine Issue

ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சம்மதம் தெரிவித்துள்ளார்  என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. விரைவில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதுதொடர்பான அறிக்கையில்,  "உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வெளியுறவு மந்திரி லேவ்ரோவ் மற்றும் செயலாளர் பிளிங்கன் ஆகியோர் இந்த வாரம் ஐரோப்பா செல்ல உள்ளனர். அதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும்.

The United States, which gave Russia a chance, ukraine Issue

ஆனால், இந்த சந்திப்பு நிகழ வேண்டுமானால், உக்ரைன் மீது  போரை தவிர்க்க ரஷ்யா ஒப்புக்கொள்ள வேண்டும்.  போரை தொடங்கினால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். அமெரிக்கா எப்போதும் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #UKRAINE #RUSSIA #VLADIMIR PUTIN #JOE BIDEN #VOLODYMYR ZELENSKYY #NETO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The United States, which gave Russia a chance, ukraine Issue | World News.