‘5 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற காவலர்..’ குடிபோதையில் நடந்த கொடூரம்..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Jun 05, 2019 04:52 PM
உக்ரைனில் குடிபோதையில் இருந்த காவலர்களால் 5 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைனின் கீவ் பகுதியில் குடிபோதையில் இருந்த இரண்டு காவலர்கள் 5 வயது சிறுவனை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. குடிபோதையில் இருந்த 2 பேரும் கேன் ஒன்றைக் குறிவைத்து சுட முயற்சித்துள்ளனர். அப்போது அடுக்குமாடிக் குடியிருப்பு முன் நின்று கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது குண்டு பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அர்சன் அவாக்கோவ் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அங்கு போராட்டம் வலுத்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்துறை அமைச்சகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
