வலிமை படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு.. கோவையில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்தப் படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜிம்மில் 181 கிலோ வெயிட்டை தூக்கிய இளம்பெண்.. கொஞ்ச நேரத்தில் நடந்த பகீர் சம்பவம்..!
பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கொரோனா காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது. அப்போது, பிப்ரவரி 24 ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 900 க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது வலிமை.
முதல்நாள் காட்சிக்கான டிக்கெட்கள் சற்று நேரத்திலேயே விற்றுத் தீர்ந்த நிலையில், வலிமை படம் ரிலீசாகும் தியேட்டர்களின் வாசலில் வான வேடிக்கை வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், வலிமை படம் திரையிடப்பட்ட தியேட்டர் ஒன்றின் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெட்ரோல் குண்டு
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கங்கா, யமுனா, காவேரி திரையரங்கில் வலிமை படம் வெளியாகி உள்ளது. இதற்காக அதிகாலை முதலே, இந்தத் தியேட்டரின் வாசலில் ரசிகர்கள் கூடினர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் தியேட்டர் அருகே பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று இருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனம் ஒன்று மட்டும் லேசாக சேதமடைந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்கள் அதிர்ச்சி
வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்று பேச்சு எழுந்தது முதல், அஜித் ரசிகர்கள் ஏக குஷியில் இருந்தனர். படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரிடம் அவ்வப்போது அப்டேட் கேட்டு இணையத்தை அதிரவிட்டனர் அஜித் ரசிகர்கள். இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வலிமை படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த நேரத்தில் வலிமை திரையிடப்பட்ட தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எகிறும் பெட்ரோல், டீசல் விலை.. ரஷ்யா - உக்ரைன் போரால் நடைபெற இருக்கும் விபரீதங்கள்..!

மற்ற செய்திகள்
