“இறுதி கட்டத்தை எட்டியுள்ள கொரோனா ’தடுப்பூசி’... மாஸ்கோ ’மக்களுக்கு’ மருந்து ஃப்ரீ தான்...!” - மாநகர மேயரின் அதிரடி அறிவிப்பு!!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கொரோனா கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் பணியில் பல உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
சில நாடுகளின் தடுப்பு மருந்து சோதனை பல கட்டங்களில் நல்ல முடிவை தந்துள்ளது. இந்நிலையில், ரஷ்யா நாடும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளது. ரஷ்யாவின் பல நிறுவனங்கள் தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வரும் நிலையில், மாஸ்கோவில்
நிறுவனம் ஒன்று கண்டுபிடித்த தடுப்பு மருந்தினை 20 தன்னார்வலர்கள் மீது செலுத்தி ஒரு மாதங்களாக அவர்களை சோதித்து வந்தனர். இதில் 20 பேருக்கும் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
இதனால் இந்ததடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கருதப்படுகிறது. அப்படி நடந்தால், ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் இந்த தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் என அந்த நகர மேயர் செர்ஜி சொஃப்யானின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனைகள் வெற்றியாக அமைந்த ஒரு வாரத்திலே இந்த முடிவை மேயர் அறிவித்துள்ளார். முன்னதாக ரஷ்யாவில் தடுப்பு மருந்து சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், சரியான அங்கீகாரம் கிடைத்ததும் மற்ற நாடுகளுக்கும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் அனுப்பப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.