"ஒரு மாத்திரை வெறும் 68 ரூபா தான்"... 'இந்தியா'வில் அடுத்த மாதம் களமிறங்கும்... 'கொரோனா' தடுப்பு மாத்திரை!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல நாடுகள் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சில இடங்களில் சோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முன்னணி பார்மா நிறுவனமான சிப்லா நிறுவனம் ஃபேவிபிராவிர் வகை மருந்தை தயாரித்துள்ளது. இது பரவலாக நல்ல முடிவுகளை அளித்துள்ளது. இந்த மருந்துக்கு சிப்லென்சா என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மாத்திரை வகையிலான இந்த மருந்து ஒன்றுக்கு ரூபாய் 68 வீதம் விற்கப்படும் என சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்த மருந்து மருத்துவமனை மூலமாக கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேவிபிராவிர் மருந்து ஜப்பானின் நிறுவனம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப மற்றும் நடுத்தர பாதிப்பில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல முடிவுகளை கொடுத்துள்ளதால், மருந்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முதலில் இந்த மருந்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.