'கொரோனா' தடுப்பு மருந்து 'ரெடி'... "டெஸ்ட் பண்ண எல்லாருக்கும் நல்ல ரிப்போர்ட் கெடச்சுருக்கு"... பல்கலைக்கழகத்தின் சோதனை முடிவில் கிடைத்த 'குட் நியூஸ்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கொரோனா கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளிலுள்ள விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 பேருக்கு மேல் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களிடம் கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது சோதனையில் உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ள தகவல் உலகம் முழுவதிலுமுள்ள மக்களிடையே சற்று நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
