QUEEN ELIZABETH : 91 வருஷமா விரும்பி சாப்பிட்டது பன்பட்டர் ஜாம் தானா..? ராணி எலிசபெத்தின் டயட் சீக்ரெட் உடைத்த அரண்மனை செஃப்

முகப்பு > செய்திகள் > உலகம்

By K Sivasankar | Sep 11, 2022 03:27 PM

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் 96 வயது வரை ஆரோக்கியமாக வாழந்ததற்கு அவரது தினசரி உணவுமுறையும் உடற்பயிற்சிகளும் கைகொடுத்துள்ளன.

Queen Elizabeth diet secret food item for the past 91 years

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 96. இந்நிலையில் அவர் 5 வயது முதலே எடுத்துக்கொண்ட உணவுபற்றி, பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் வின்ட்சர் கோட்டையில் உள்ள அரச சமையலறை சமையல்காரர்கள் இதுபற்றி தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் தங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமாகவும் ருசியாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.  அப்படியான உணவால் நீண்ட ஆயுளையும் பெற வேண்டும் என்றால் அதற்கு எளிமையான மற்றும் தேர்ந்தெடுத்த உணவை உண்டாக வேண்டி இருக்கிறது. அப்படித்தான் ராணி இரண்டாம் எலிசபெத் ஒரு உணவு முறையை தம்முடைய காலத்தில் பின்பற்றியிருக்கிறார். ஆம், பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் வின்ட்சர் கோட்டையில் உள்ள அரச சமையலறைகளில் திறமையான பணியாளர்கள் அமர்த்தப்பட்டு, ராணிக்காக  ஆரோக்கியமான உணவுகளை சமைப்பதற்காவே தனியாக சமையல்காரர்கள் இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் கூற்றுப்படி, ராணி எலிசபெத், பெரும்பாலும் வீட் பிரெட் மற்றும் ஜாம் உள்ளிட்ட லைட்டான உணவையே அதிகம் எடுத்துக் கொள்வாராம். பாரம்பரிய பிரெஞ்ச் மற்றும் பிரிட்டிஷ் உணவுகளையே எடுத்துக்கொள்ளும் அவர், பெரும்பாலும் அரண்மனையின் தோட்டங்களில் விளைவும் ஃபிரஷ் காய்கறிகளையும், அவருக்கென்று தனியாக ஆற்றில் வளர்க்கப்படும் சால்மன் மீன் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்வாராம். 

இவை தவிர, யோகர்ட், செரல் (அ) மல்டிகிரெய்ன் டோஸ்ட், சிறப்பு நாட்களாக இருந்தால் ஸ்கிராம்பல்டு எக் மற்றும் ஸ்மோக்டு சால்மன் மீன் ஆகியவற்றை ராணி சாப்பிடுவார், பிரிட்டிஷ் ஹெரிடேஜ் டிராவல் புத்தகத்தில் குறிப்பாக எழுதப்பட்டிருக்கிறது.

தவிர, ராணி எலிசபெத் புரத உணவுகள், கிரில்டு மீன், ஸ்பின்னாச், க்ரில்டு சிக்கன் ஆகியவற்றை மதிய உணவாக எடுத்துக் கொள்கிறார். குறிப்பாக ஒட்டகம், முயல் உள்ளிட்ட சில இறைச்சி வகைகள், உள்ளிட்டவற்றை ராணி உண்டதே இல்லை என கூறப்படுகிறது.

Tags : #QUEEN ELIZABETH #QUEEN ELIZABETH DIET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Queen Elizabeth diet secret food item for the past 91 years | World News.