ராணி எலிசபெத் மறைவு பத்தி.. பல மாதங்கள் முன்பே கணிப்பு.. உலகமே தேடும் இளம் பெண்.. "யாரு தாயி நீ??"

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Sep 12, 2022 08:47 PM

கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த ராணி எலிசபெத், தன்னுடைய 96 வயதில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு உயிரிழந்தார்.

woman predict about queen elizabeth before few months

முன்னதாக, ராணி எலிசபெத் இறப்பதற்கு ஒரு சில தினங்கள் முன்பாகவே, அவரது உடல்நிலை சற்று மோசமாக இருந்ததாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

Also Read | "அட, இதுவா இம்புட்டு லட்ச ரூபா'க்கு ஏலம் போச்சு??".. ராணி எலிசபெத் Use செய்த பொருள்.. விலை'ய கேட்டா தலையே சுத்தும்!!

அப்படி ஒரு சூழ்நிலையில், தனது 96 ஆவது வயதில், ராணி எலிசபெத் காலமானார். அதிக ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்தவர் என்ற பெருமையும் எலிசபெத் வசம் தான்.

ராணி எலிசபெத் மறைவுக்கு உலக அளவில் முன்னணி தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்திருந்தனர். மேலும், செப்டம்பர் 19ஆம் தேதி ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தற்போது ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இளம் பெண் ஒருவர் ராணி எலிசபெத் மரணம் குறித்து பல மாதங்களுக்கு முன்பே கணித்த விஷயம், ஒட்டுமொத்த உலகத்தினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

woman predict about queen elizabeth before few months

அமெரிக்காவின் Foxborough என்னும் பகுதியில் வசிப்பவர் Hannah Carroll. 19 வயதே ஆகும் இவர், 2022 ஆம் ஆண்டில் என்னென்ன நடக்கும் என்பது பற்றி, சில கணிப்புகளை கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார். அப்படி அவர் கணிதத்தில், இதுவரை மொத்தம் 11 விஷயங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால், Hannah கணிப்பது எல்லாம் கிம் கார்தஷியன் உள்ளிட்ட பல தொலைக்காட்சி மற்றும் ஊடக பிரபலங்கள் தொடர்பான செய்திகளை தான். உதாரணத்திற்கு கிம் கார்தஷியன் மற்றும் டேவிட்சன் இந்த ஆண்டு பிரேக் அப் செய்வார்கள் என Hannah கணித்திருந்தார். அதன் படி, சமீபத்தில் அவர்கள் இருவரும் பிரிந்து கொண்டதாக தகவல்களும் வெளியாகி இருந்தது.

woman predict about queen elizabeth before few months

இதே போல, Rihanna, Megan Fox குறித்து இந்த ஆண்டில் Hannah கணித்த நிறைய விஷயங்கள், அப்படியே நடைபெறவும் செய்துள்ளது. அவர் ஏற்கனவே கணித்த விஷயங்கள் நடந்து வருவதால், அவரை ஏராளமானோர் பின் தொடரவும் செய்கிறார்கள். அது மட்டுமில்லாமல், தற்போது இதனை ஒரு தொழில் ஆகவே, Hannah தொடங்கியுள்ள நிலையில், மாதத்திற்கு சுமார்  £1,500 (இந்திய மதிப்பில் சுமார் 1.4 லட்சம் ரூபாய்) வரை அவர் சம்பாதித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஹன்னா கணித்த விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று தான் ராணி எலிசபெத்தின் மறைவு. கடந்த ஜனவரி மாதம், ஹன்னா கணித்திருந்த போது ராணி எலிசபெத் இந்த ஆண்டு மறைந்து விடுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன் படி, தற்போது நிஜத்திலேயே நடந்துள்ள விஷயம், பலரது கவனத்தையும் ஈர்த்து இளம்பெண்ணான ஹன்னாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Also Read | ராணி எலிசபெத் எழுதிய 'கடிதம்'.. "இன்னும் 63 வருசத்துக்கு யாராலயும் படிக்கவே முடியாது".. அப்படி என்ன கத பின்னாடி இருக்கு??

Tags : #QUEEN ELIZABETH #ராணி எலிசபெத்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman predict about queen elizabeth before few months | World News.