‘நாட்டு மக்களுக்கு முன்மாதிரியா இருக்கணும்’... ‘நாமளே பர்ஸ்ட் எடுத்துக்கலாம்’... ‘வெளியான தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தடுப்புமருந்து பாதுகாப்பானது என பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் முதல் தடுப்பு மருந்தை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் பிலிப் எடுத்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து வருகிறது. இங்கு கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதுவரை அங்கு கொரோனாவால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 61,000-க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா நோய் பரவலை தடுக்க 95 சதவீதம் பலனளிக்கும் என கூறப்பட்டு வரும், அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் ஜெர்மனியின் பனோஎன்டெக் நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவான, கொரோனா தடுப்பு மருந்தை இந்த வாரம் முதல் நாட்டு மக்களுக்கு வழங்க பிரிட்டன் அரசு முதல்நாடாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்காக பெல்ஜியத்தில் இருந்து 8,00,000 டோஸ் தடுப்பு மருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 4 கோடி டோஸ் தடுப்பு மருந்துகளை ஃபைசர் நிறுவனத்திடம் பிரிட்டன் அரசு ஆர்டர் செய்துள்ளது. இதையடுத்து, பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பதை உணர்த்தும் வகையில், பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வரவுள்ள தடுப்பு மருந்தை முதலாவதாக இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் எடுத்துக்கொள்ளவுள்ளார்.
94 வயதான எலிசபெத் மகாராணி மற்றும் 99 வயதான இளவரசர் பிலிப் ஆகியோர் ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றவர்களில் முதன்மையானவர்களாக இருப்பார்கள் இங்கிலாந்து அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மற்ற செய்திகள்
