"பணம் தான் அவர்களின் நோக்கம்..." "அரச பாரம்பரியத்தை இழிவு படுத்திவிட்டனர்..." ஹாரி தம்பதியை வெளுத்து வாங்கிய 'மேகனின் தந்தை'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Jan 21, 2020 06:42 PM

'ஹாரி - மேகன் தம்பதி அரச குடும்பத்திலிருந்து வெளியேறியதைப் பார்த்தால் பணத்துக்காகச் செல்கிறார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது’ என மேகனின் தந்தை தெரிவித்துள்ளார்.

Harry meghan seems to be going for money-meghan\'s father

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவரின் மனைவி மேகனும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் இருவரும்  வடஅமெரிக்காவில் சுதந்திரமாக வாழ விரும்புவதாக விளக்கம் அளித்திருந்தனர்.  இவர்களின் விருப்பத்துக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத்தும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில்,  தன் மகள் மேகனைப் பற்றி தந்தை தாமஸ் மார்க்லே (Thomas Markle) பேசியுள்ளார். இங்கிலாந்தின் `சேனல் 5' என்ற ஊடகம் எடுக்கும் ஆவணப்படத்தில் மேகன் மற்றும் ஹாரியின் முடிவைப் பற்றிய தன் கருத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. வரும் வாரங்களில் முழு படமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் பேசியுள்ள தாமஸ், "இவர்களின் முடிவு மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அனைத்து பெண்களும் தாங்கள் ஒரு இளவரசியாக வேண்டும் என்றே விரும்புவார்கள். அப்படியான ஒரு வாழ்வு மேகனுக்குக் கிடைத்தது. ஆனால், தற்போது அவர் அதைத் தூக்கி எறிந்துவிட்டார். இதைப் பார்க்கும்போது பணத்துக்காகத்தான் மேகன் தன் அரச வாழ்க்கையைத் தூக்கி எறிந்தார் என்றே நினைக்கத் தோன்றுகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அரச குடும்பத்தின் பாரம்பரியத்தை அவர்கள் இருவரும் இழிவாக்கிவிட்டதாகவும், அவர்கள் வெளியுலகில் என்ன தேடுகிறார்கள் எனத் தெரியவில்லை என்றும் அவர் பேசியுள்ளார்.

Tags : #HARRY-MEGHAN #THOMAS MARKLE #BRITAIN #QUEEN ELIZABETH