'73 வருட தாம்பத்தியம்'... 'மகாராணியார் மீது இளவரசர் பிலிப் கூறிய ஒரே ஒரு புகார்'... சுவாரசிய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது மனைவி மீது இளவரசர் பிலிப் கூறிய புகார் குறித்து பிலிப்பின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் Gyles Brandreth என்பவர் பகிர்ந்துள்ளார்.

கணவன்மார்களுக்கு தங்கள் மனைவி மீது ஏதாவது புகார் நிச்சயம் இருக்கும். சிறிய புகார் இல்லை என்றாலும் சும்மா ஏதாவது ஒரு குறை சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகக் கூட சில குறைகளைச் சொல்வது உண்டு. அது சாதாரண குடும்பமாக இருந்தாலும் சரி, அரச குடும்பமாக இருந்தாலும் சரி. இதில் மட்டும் விதிவிலக்கு என்பது நிச்சயம் இருக்காது.
அந்த வகையில் இங்கிலாந்து மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப்புக்கு மனைவி மீது ஏதாவது புகார் உண்டா? அவர் அப்படி மனைவியைப் பற்றி ஏதாவது கூறியிருக்கிறாரா? என்பது குறித்து மனம் திறந்துள்ளார், இளவரசர் பிலிப்பின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் Gyles Brandreth.
''ஒரு முறை என்ன இவர், எப்போது பார்த்தாலும் தொலைப்பேசியில் பேசிக்கொண்டே இருக்கிறார், அப்படி யாரிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறார்'' என்று Gylesயிடம் கூறினாராம் இளவரசர் பிலிப். குதிரைப் பந்தயத்தில் ஆர்வமுடைய மகாராணியார், அவரது பந்தய மேலாளரிடம் தனது குதிரைகளைக் குறித்துத்தான் பேசியிருப்பார் என்றாராம் Gyles.
அது தவிர்த்து ஒருமுறை கூட மகாராணியாரைக் குறித்து அவரது கணவர் எந்த புகாரும் கூறியதில்லை எனக் கூறியுள்ளார் Gyles. மனைவிக்காக தனக்குப் பிடித்த வேலையையே விட்டவர் தான் இளவரசர் பிலிப் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
