The Legend
Maha others

சிவப்பு நிறத்துல மாறிய மேகம்.. பதைபதைத்துப்போன விமானி.. உலகையே ஸ்தம்பிக்க வச்ச சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jul 26, 2022 04:41 PM

அட்லாண்டிக் கடலின் மேலே சிவப்பு நிறத்தில் தோன்றிய மேகங்கள் குறித்து தான் உலகம் முழுவதும் தற்போது பேசப்பட்டு வருகிறது.

Pilot Spots Mysterious Red Glow In Clouds Over Atlantic Ocean

Also Read | போலியான வழக்குல 20 வருஷம் ஜெயில்.. வெளியே வந்து கல்யாணம் செஞ்ச நபர்.. அடுத்தநாளே பொண்டாட்டி கொடுத்த அதிர்ச்சி.. பாவம்யா மனுஷன்..!

இணையம் எப்போதுமே பல ஆச்சரியகரமான தகவல்களுக்கு தாயகமாக விளங்குவது உண்டு. இதுபோன்ற வினோதமான சம்பவங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுவதுண்டு. மேலும், இதுபோன்ற வினோத தகவல்களுக்காகவே ஏராளமானோர் சமூக வலை தளங்களில் காத்திருக்கின்றனர். அப்படியானவர்களுக்கு ஒரு வித்தியாசமான பரிசு கிடைத்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அட்லாண்டிக் கடலின் மேலே பறந்த விமானி ஒருவர் எடுத்த புகைப்படம் தான் அது.

வைரல் புகைப்படம்

உலகின் மிகப்பெரும் கடல்களில் ஒன்றான அட்லாண்டிக் கடலின் மேலே விமானம் ஒன்று பறந்திருக்கிறது. அப்போது எதேச்சையாக விமானி கீழே பார்த்திருக்கிறார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட செய்திருக்கிறது. மேகத்தின் நடுவே செஞ்சிவப்பு நிறத்தில் ஒளி தோன்றியிருக்கிறது. இதனை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வெளியிடப்படவே அது வைரலாகி விட்டது.

Pilot Spots Mysterious Red Glow In Clouds Over Atlantic Ocean

இருப்பினும் இது குறித்த வேறு விபரங்கள் ஏதும் பகிரப்படவில்லை. அதேபோல, இந்த புகைப்படத்தை எடுத்த விமானி யார் என்பதும் மர்மமாகவே இருக்கிறது. இந்நிலையில் இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் பல்வேறு விதமான விவாதங்களை கிளப்பியுள்ளது. சிலர் இதனை ஏலியன்களின் வேலை என்றும், அழிவுக்கான வழி என்றும் கூறிவருகின்றனர்.

முதல்முறை அல்ல

இந்நிலையில், இந்த புகைப்படங்களை பகிர்ந்த சிலர் வித்தியாசமான கருத்து ஒன்றையும் முன்வைத்திருக்கின்றனர். அதாவது, கடலில் மீன்பிடிக்கும் படகுகள் அடர்ந்த விளக்குகளை நீரில் பிரதிபலிக்க செய்வார்களாம். மீன்கள் அந்த ஒளியினை பின்தொடர்ந்து வரும்போது அவற்றை வலைவீசி மீனவர்கள் பிடிப்பார்கள் என கூறப்படுகிறது. அப்படியான நாளில் வெளிச்சம் மேகத்தில் பட்டு எதிரொளித்திருக்கலாம் எனவும் சிலர் கூறிவருகின்றனர். ஆனால், இந்த சிவப்பு ஒளி எப்படி ஏற்பட்டது என்பது குறித்து இதுவரையில் எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

Pilot Spots Mysterious Red Glow In Clouds Over Atlantic Ocean

இருப்பினும், இப்படி மேகத்தில் சிவப்பு நிறம் தோன்றுவது இது முதல்முறை அல்ல. 2014 ஆம் ஆண்டில், ஹாங்காங்கில் இருந்து அலாஸ்காவின் ஏங்கரேஜ்க்கு போயிங் 747-8 விமானம் ஒன்று பறந்தது. அப்போது ரஷ்ய தீபகற்பமான கம்சட்காவின் தெற்கே விமானம் பயணித்த வேளையில் ஒளிரும் சிவப்பு மேகங்களை பார்த்ததாக விமானியும், துணை விமானியும் தெரிவித்திருந்தனர். இது அப்போது வைரலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | "நண்பரின் மனைவியுடன் ரகசிய உறவா??.." சர்ச்சையை உண்டு பண்ணிய செய்தி.. எலான் மஸ்க் சொன்னது என்ன?

Tags : #PILOT #RED GLOW IN CLOUDS #ATLANTIC OCEAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pilot Spots Mysterious Red Glow In Clouds Over Atlantic Ocean | World News.