“ஃபிளைட்ல ஒரு ஸ்பெஷல் பாசஞ்சர் இருக்காங்க”.. திடீரென பைலட் கொடுத்த சர்ப்ரைஸ்.. ‘செம’ ரொமான்டிக் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனைவி பயணம் செய்த விமானத்தில் கணவன் பைலட்டாக இருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இண்டிகோ விமானத்தில் பணியாற்றி வரும் விமானியின் மனைவி, தனது கணவர் பைலட்டாக பணியாற்றும் அதே விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது தன் மனைவியை வித்தியாசமாக வரவேற்ற விமானியின் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேப்டன் அல்னீஸ் விரானி என்ற இண்டிகோ விமான பைலட், விமானத்தின் பொது அறிவிப்பு முறையைப் பயன்படுத்தி தனது மனைவியை வரவேற்றார். இதனை அவரது மனைவி ஜஹ்ரா செல்போனில் பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், ‘இந்த மனிதருக்கு தகுதியுடையளாக மாற, நான் என் வாழ்க்கையில் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை’ என ஜஹ்ரா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், மனைவி ஜஹ்ரா விமானத்தில் ஏறும்போது கேப்டன் விரானியிடம் கை அசைத்தார். அதைப் பார்த்து விமானிகள் அறையின் ஜன்னல் வழியாக பதிலுக்கு விரானி கை காட்டினார். இதனை அடுத்து விமானத்தில் தனது இருக்கையில் ஜஹ்ரா அமர்ந்தார்.
அப்போது அவரது கணவர் திடீரென்று மைக் வாயிலாக பயணிகளிடம் பேச ஆரம்பித்தார். அதில், ‘இந்த விமானத்தில் உங்களுடன் ஒரு சிறப்பு பயணி இருக்கிறார். எனது மனைவியை இந்த விமானத்தில் மும்பைக்கு அழைத்து செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இது மற்றவர்களுக்கும் ஒரு சிறிய விஷயம். ஆனால் எனக்கு நிறைய அர்த்தம் உள்ள ஒன்று. விமானத்தில் உள்ள உங்கள் அனைவருடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்’ என விமானி அல்னீஸ் விரானி உருக்கமாக கூறினார்.

மற்ற செய்திகள்
