நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்.. கப்பலுக்குள்ள இருக்கது என்னன்னு தெரியுமா? கவலையில் உலக நாடுகள்
முகப்பு > செய்திகள் > உலகம்சுமார் 4000 சொகுசுக் கார்களுடன் அட்லாண்டிக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிவதால் தனித்து விடப்பட்டு இருப்பது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பனாமா நாட்டிற்குச் சொந்தமான ஃபெலிசிட்டி ஏஸ் என்ற கப்பல் அட்லாண்டிக் கடலின் அசோர்ஸ் தீவுப் பகுதிக்கு அருகே செல்லும்போது தீ விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. இந்த விபத்தின் காரணமாக, கப்பலில் இருந்த 22 பணியாளர்களை போர்ச்சுகீசிய கடற் படையினர் மீட்டிருக்கின்றனர்.
புதன்கிழமை நேர்ந்த இந்த விபத்தின் காரணமாக மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் என மொத்தம் 22 பேர் அந்தக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு அருகில் இருந்த ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆட்கள் யாருமின்றி ஃபெலிசிட்டி ஏஸ் என்ற கப்பல் கடலில் தனித்து விடப்பட்டிருக்கிறது.
சொகுசுக் கார்கள்
இந்தக் கப்பலில் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 3,965 வாகனங்கள் இருப்பதாக அந்நிறுவனத்தின் அமெரிக்க கிளை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தினைச் சேர்ந்த கார்கள் மட்டுமல்லாது ஆடி, போர்ஷே, லம்போர்கினி உள்ளிட்ட சொகுசுக் கார்களும் கப்பலில் இருக்கின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதர்களை காப்பாற்றுவதே இலக்கு
இந்த தீ விபத்து குறித்து பேசிய போர்ஷே நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் Luke Vandezande," தீப்பிடித்த கப்பலில் எங்களது 1,100 வாகனங்கள் இருக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களை ஆட்டோமொபைல் டீலர்கள் தொடர்புகொண்டு வருகிறார்கள். கப்பலில் இருந்து 22 பேர் மீட்கப்பட்டு ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதே எங்களது முதன்மை குறிக்கோளாக இருக்கிறது" என்றார்.
இந்த தீ விபத்து குறித்து லம்போர்கினி நிறுவனம் கருத்து கூறவில்லை. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான எத்தனை வாகனங்கள் அக்கப்பலில் இருக்கின்றன எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை.
முதல் தடவை அல்ல
சொகுசு கார்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் விபத்தை சந்திப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு ஆடி, போர்ஷே உள்ளிட்ட 2000 கார்களை ஏற்றிச் சென்ற Grande America கப்பல் கடலில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள் கவலை
மோட்டார் துறையில் உலக அளவில் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் சுமார் 4000 சொகுசுக் கார்கள் நடுக்கடலில் தீப்பிடித்து எரியும் கப்பலில் சிக்கிக்கொண்டது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என பெரு நிறுவனங்கள் அச்சப்படுகின்றன. இது வாகன சந்தையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன.
தன்னை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸையே ஆட்டையைப்போட்ட நபர்.. கோவையில் பரபரப்பு.!