கிளம்பிய கொஞ்ச நேரத்தில்.. மீண்டும் 'AIRPORT' திரும்பிய 'விமானம்'.. "40 நிமிஷம் கழிச்சு தான் விஷயமே தெரிய வந்துருக்கு.."

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | May 05, 2022 05:37 PM

பிரிட்டனில் இருந்து, அமெரிக்கா புறப்பட்ட விமானம் ஒன்று, அவசர அவசரமாக பாதி வழியிலேயே மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.

London flight returned to airport pilot not complete training

பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து, 'Virgin Atlantic' நிறுவனத்திலுள்ள விமானம் ஒன்று, நியூயார்க்கிற்கு கிளம்பி உள்ளது.

விமானம் கிளம்பி சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு, அயர்லாந்து மேலே பறந்து கொண்டிருந்துள்ளது.

பயிற்சியே முடிக்கல..

அப்போது தான், விமானத்தில் இருந்த விமானிகளில் ஒருவர், இன்னும் விமான பயிற்சியே முடிக்கவில்லை என்பது தெரிய வந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றது. விமானத்தை இயக்கும் விமானி என்பவர், அவசர நேரங்களில் விமானத்தினை தரையிறக்கவும், விமான அறையுடன் தொடர்பு கொள்வது போன்ற வேலைகளிலும், அதே போல பயணிகளின் பாதுகாப்புக்கும் அவர் பொறுப்பானவர் ஆவார்.

London flight returned to airport pilot not complete training

அப்படிப்பட்ட ஒரு விமானியின் பொறுப்பில் இருந்த நபர், இன்னும் பயிற்சியே முழுவதுமாக முடிக்கவில்லை என்ற தகவல், கடும் பரபரப்பைக் கிளப்பி இருந்தது. உடனடியாக, சக விமானி விமானத்தை மீண்டும் ஹீத்ரோ விமான நிலையத்துக்கே திருப்பி உள்ளார். இதன் பின்னர் தகுதியான ஒரு விமானியுடன் மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.

கோபமடைந்த பயணிகள்

பயிற்சி கூட முழுமையாக முடிக்காத ஒருவர் விமானியாக இருந்ததால், அந்த விமானத்தில் இருந்த சுமார் 300 பயணிகள், 3 மணி நேரம் தாமதமாக அமெரிக்கா சென்றடைந்தார்கள். இந்த சம்பவத்தின் காரணமாக, அனைவரும் சங்கடம் அடைந்தார்கள். அதே போல, மீண்டும் விமான நிலையம் சென்று தாமதமாக கிளம்பியதால், அதிலிருந்த பயணிகளும் அதிகம் கோபமடைந்தனர்.

London flight returned to airport pilot not complete training

சிரமத்திற்கு வருந்துகிறோம்..

இந்த சம்பவம் குறித்து, Virgin Atlantic விமான நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டுள்ளது. அதில், "விமானி மாற்றத்தின் காரணமாக, தாங்கள் சேர வேண்டிய நேரத்தை விட, சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக சென்று சேர்ந்த எங்களின் பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம்" என தெரிவித்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

Tags : #FLIGHT #PILOT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. London flight returned to airport pilot not complete training | World News.