'உன்மேல நம்பிக்கை இருக்கு, கண்டிப்பா ஒருநாள்...' 'தணடனைய' கொடுத்திட்டு நீதிபதி சொன்ன 'அந்த ஒரு' வார்த்தை...! - '16 வருஷம்' கழிச்சு நடந்திருக்கும் வியக்க வைக்கும் நிகழ்வு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒரு நீதிபதியின் தீர்ப்பு மாற்றிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மெசிக்கன் மாகாணத்தில், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு, நீதிபதி புரூஸ் மோரோ முன்பு போதை பொருள் விற்பனை செய்ததாக ஒரு கும்பலை கூண்டில் ஏற்றியுள்ளனர். அதில் குற்றவாளியாக எட்வர்ட் மார்டெல்லுக்கு (Edward Martell) என்னும் 27 வயது நபரும் நிறுத்தப்பட்டுள்ளார்.
அவ்வழக்கின் தீர்ப்புப்பாக அந்த கும்பலுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் வழங்கி உள்ளார் நீதிபதி புரூஸ் மோரோ
ஆனால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் எட்வர்ட் மார்டெல்(27) மற்ற குற்றவாளிகளை போல இல்லாமல் இருப்பதை உணர்ந்த நீதிபதி புரூஸ் அவர் திருந்துவார் என்பதையும் கணித்து 3 ஆண்டு தண்டனை மட்டுமே வழங்கினார்.
போதை மருந்தை விற்க வேண்டாம், எனக்கு உன்மேல் நம்பிக்கை உள்ளது, கண்டிப்பாக ஒருநாள் உன்னால் பெரிய நிறுவனத்தின் தலைவர் என்ற அளவுக்கு உயர முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகளையும் நீதிபதி வழங்கினார். நீதிபதி புரூஸ்ஸின் இந்த செயல் ஒரு மனிதனின் வாழ்க்கையையே தற்போது மாற்றியுள்ளது எனலாம்.
தன்னுடைய தண்டனை காலம் முடிந்த பின் எட்வர்ட் மார்டெல், விடுதலையாகி சட்டம் படித்து பட்டம் வாங்கியுள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் எட்வர்ட் மார்டெல்லுக்கு மிச்சிகன் பார் கவுன்சில் வழக்கறிஞராக அதே நீதிபதி புரூஸ் மோரோவே (Bruce Morrow) பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.

மற்ற செய்திகள்
