திடீரென வெடித்த FLIGHT டயர்... அங்கிருந்த அய்யாச்சாமி கொடுத்த பலே ஐடியா... காத்மாண்டுவே ஆடிபோச்சு!
முகப்பு > செய்திகள் > உலகம்மக்கள் சிலர் சேர்ந்து விமான ஓடுதளத்திலிருந்து விமானத்தை உருட்டியே ஓரங்கட்டிய வீடியோ தான் தற்போது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த புதன்கிழமை நேபாளத்தில் உள்ள ஒரு விமான நிலையத்தில் பயணிகள் எல்லாம் இணைந்து விமானம் ஒன்றை தள்ளி நகர்த்தியே காட்சி வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு வைரல் ஆகி வருகிறது. நேபாள் நியூஸ் தகவலின் அடிப்படையில், நேபாளத்தின் கோல்டி பகுதியில் உள்ள பஜூரா விமான நிலையத்தில் ‘தாரா ஏர்’ விமானம் தரை இறங்கி உள்ளது.
அப்போது அந்த தாரா ஏர் விமானத்தின் பின் டயர் வெடித்துள்ளது. இதனால் அந்த விமானம் ஓடு தளத்திலேயே நின்றுவிட்டது. ஓடுதளத்தை விட்டு டயர் இல்லாமல் நகர்த்த முடியாத காரணத்தால் அந்த விமானத்துக்கு பயணிகளே உதவ முன் வந்துள்ளனர். இந்த டயர் வெடித்த விமானம் நின்றிருக்கும் இடத்தில் மற்றொரு விமான தரையிறங்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
அதனால், மற்றொரு விமானம் தரை இறங்க முடியாமல் தவித்து வந்துள்ளது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் திணறுவதைப் பார்த்த அங்கிருந்த பயணிகள் தாங்களும் முன் வந்து அந்த விமானத்தை கைகளால் தள்ளியே ஓரங்கட்டி விடலாம் என வந்துள்ளனர். 20 பயணிகள் இணைந்து அந்த தாரா ஏர் விமானத்தை ஓடுதளத்தில் இருந்து மெதுவாக தள்ள ஆரம்பித்துள்ளனர்.
सायद हाम्राे नेपालमा मात्र होला ! pic.twitter.com/fu5AXTCSsw
— Samrat (@PLA_samrat) December 1, 2021
அடுத்த விமானத்துக்கு வழிவிடும் முயற்சியில் இந்த பயணிகளின் உதவியால் டயர் வெடித்த விமானம் ஓரங்கட்டப்பட்டது. “இது நேபாளத்தில் மட்டுமே நடக்கும்” என்பது போல பலரும் பயணிகள் இணைந்து விமானத்தை தள்ளும் வீடியோ காட்சியை சமுக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர். இதனால் இந்த வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.