மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழகத்துக்கு ‘மீண்டும்’ நேரடி விமான சேவை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமான சேவையை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து தமிழ்நாடுக்கு நேரடி விமான சேவை தொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (25.11.2021) மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ஒன்றிய அரசின் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கொரோனா பெருந்தொற்று கால விமான போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை.
அதனால் அந்நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும் நேரங்களில், நேரடி விமான சேவை இல்லாத காரணத்தால், துபாய், தோகா, கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதனால் அவர்கள் பல்வேறு இன்னல்களுடன் அதிக விமானக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளது. இத்தகைய இடர்பாடுகளைத் தீர்ப்பதற்கு தற்காலிக விமான சேவைகளை வழங்கிட ஏதுவாக, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கிடையில் தற்காலிக கொரோனா கால “விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள்” உடன்படிக்கையை செய்து கொள்ள வேண்டும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
