"இன்னும் 30 வருஷம் வாழணும்.." பிளான் போட்டிருந்த வார்னே.. கடைசில எல்லாம் தலைகீழ மாறிடுச்சு..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான், கடந்த மார்ச் 4-ஆம் தேதி திடீரென காலமானது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தாய்லாந்தில் நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க சென்றிருந்த ஷேன் வார்னே, தங்கியிருந்த விடுதியில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
திடீரென நினைவின்றி கிடந்த வார்னேவை காப்பாற்ற அவரது நண்பர்கள் முயற்சி மேற்கொண்ட போதும், பலன் கொடுக்கவில்லை.
உருகிய கிரிக்கெட் பிரபலங்கள்
ஷேன் வார்னேவின் மறைவு, ஒட்டுமொத்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. கிரிக்கெட் கண்ட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர், 52 வயதில் மறைந்தது பற்றி, அவருடன் இணைந்து ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் இதர அணி வீரர்கள், உருக்கத்துடன் வார்னேவுடனான நினைவுகளை பகிர்ந்திருந்தனர்.
இயற்கை மரணம் தான்
தொடர்ந்து, பிரேத பரிசோதனையில், வார்னேவின் மறைவு, இயற்கை காரணங்கள் மூலம் தான் என்பது உறுதியானது. முன்னதாக, அவரது மரணத்தில் பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தன. வார்னே உயிரிழப்பதற்கு சில மணி நேரம் முன்பு, மசாஜ் செய்யும் பெண்கள் சிலர், வார்னேவின் அறைக்கு வந்து சென்றனர். அதே போல, வார்னே தங்கியிருந்த அறையில் ரத்தக்கறை இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
வார்னே பற்றிய ரகசியம்
ஆனால், பரிசோதனைகள் முடிவில் மாரடைப்பு ஏற்பட்டு இயற்கையாக தான் அவர் உயிரிழந்தார் என்பது உறுதியானது. இந்நிலையில், வார்னேவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், உறவு ஆலோசனைகள் வழங்கி வந்த லியோன் யங், ஷேன் வார்னே தன்னிடம் கூறியதாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
30 ஆண்டுகள் வாழணும்
"அனைத்தும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. மூன்று மாதங்கள் விடுமுறைக்கும் வார்னே முன்பதிவு செய்திருந்தார். மேலும் தன்னுடைய குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும் எண்ணியிருந்தார். உடல்நலம் குறித்த கவலை எதுவும் அவருக்கு இல்லை. அதே போல, இன்னும் 30 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும் வார்னே நினைத்திருந்தார்.
நிறைய திட்டங்கள்
மேலும், அவருடைய ரிலேஷன்ஷிப் குறித்தும் உரையாடினோம். அப்போது, புதிதாக ஒருவரை தேடிக் கண்டுபிடிக்க வார்னே தயாராக இருந்தார். தன்னுடைய கடந்த காலத்தை பற்றி, வார்னே ஒரு போதும் சிந்தத்ததில்லை. நான் அவருடன் பேசிய போது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அதே போல, எதிர்காலம் பற்றிய அதிக ஆவலும் அவரிடம் இருந்தது" என லியோன் யங் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் மீண்டும் வேதனை
வார்னேவின் திடீர் மறைவு, தன்னை அதிகம் அதிர்ச்சிக்குள் ஆகியிருந்தது என்றும், லியோன் யங் கூறியுள்ளார். அடுத்த 30 ஆண்டுகள் வாழ வேண்டி, வார்னே திட்டம் போட்டிருந்த நிலையில், விதி இப்படி அவரது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
என்னய்யா நடக்குது?… ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்தாரா சாஹல்?