சுத்தமா காசு இல்லங்க...! 'வேணும்னா எங்க கழுதைகள தர்றோம்...' - வாங்கிய கடனுக்கு வித்தியாசமாக 'டீல்' செய்யும் நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பரவலால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான் தன் கடன் சுமையை அடைக்க கழுதைகளை பயன்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலால் வளர்ந்த நாடுகளே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் வளர்ந்து வரும் நாடுகள் திக்குமுக்காடி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தன் கடன் சுமையை அடைக்க கழுதைகளை பயன்படுத்தி வரும் செய்தி வெளியாகியுள்ளது.
சிறிய நாடான பாகிஸ்தான், இதுவரை சவுதி அரேபியாவிடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடனும், ஐக்கிய அரபு அமீரகத்திடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகிறது. இருந்தாலும் பாகிஸ்தானுக்கு, சீன அரசு அவ்வப்போது நிதியுதவி அளித்து ஆதரவாக இருக்கிறது.
உலக அளவில் பாகிஸ்தான் கழுதைகள் அதிகம் வாழும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சீனாவிடமும் வாங்கிய பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் கொடுத்தே பாகிஸ்தான் அரசு சமாளித்து வருகிறது.
பொதுவாக சீனாவில் கழுதைப்பால் மற்றும் கழுதைகளின் தோல் ஆகியவை மருந்து உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே சீனாவிற்கு கழுதைகளுக்கான தேவை அதிகமாகி உள்ளது.
மேலும், கழுதைகளிலிருந்து பல்வேறு நோய்களுக்கு பாரம்பரிய மருந்துகளையும் சீனா கழுதைகளிலிருந்தே தயாரிக்கிறது. ஆண்மையை அதிகரிக்கும் கொழுப்பு சத்துகளும் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
அதனால், சீனாவின் தேவையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான், ஆண்டுதோறும் 80 ஆயிரம் கழுதைகளை சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலமாக பல கோடி ரூபாயை பாகிஸ்தான் வருமானமாக ஈட்டுகிறது.
இதனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கழுதைகள் இனப்பெருக்கத்தை பெருக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். கழுதைக்காகவே பாகிஸ்தானில் தனி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பாகிஸ்தானில் கழுதை பண்ணைகளை அதிகப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த அணுகுமுறைக்கு பாகிஸ்தான் எதிர்கட்சிகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.