'மேட்ச் நேரத்துல எவ்வளவு திட்டி இருப்போம்'... 'இந்தியர்களுக்காக ஷோயப் அக்தர் விடுத்த வேண்டுகோள்'... நெகிழ வைத்த பாகிஸ்தான் நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவுக்காகப் பிரபல கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுப் பாகிஸ்தான் நெட்டிசன்கள் பலரும் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புக்கு உதவ வேண்டும் என பாகிஸ்தானைச் சேர்ந்த மக்கள், அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ட்விட்டர் மூலமாகத் தொடர்ச்சியான பதிவுகளை இட்டு, இந்தியாவுக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கில் இப்படி ட்வீட்கள் பதிவிடப்பட்டன.
இதற்கிடையே பாகிஸ்தான் நெட்டிசன்கள் இப்படி இந்தியாவுக்கு உதவக்கோரி கோரிக்கை வைத்ததற்கு பின்புலமாக இருந்தவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர். அவர்தான் முதலில், இந்தியாவின் நிலை குறித்து வீடியோ வெளியிட்டு உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைக்க, அதன்பின்பு நெட்டிசன்களும் இந்திய நிலையை உணர்ந்து தொடர் அழுத்தங்களை இம்ரான் கானுக்கு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து ஷோயப் அக்தர் வெளியிட்டிருந்த வீடியோவில், ''உண்மையில் கொரோனாவை எதிர்த்து போராடுகிறது. உலகளாவிய ஆதரவு தேவை. அங்கு சுகாதார அமைப்பு நொறுங்கி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிப்பது எந்த அரசாங்கத்தாலும் முடியாத ஒன்று. இந்தியாவுக்கு உதவ வேண்டும் என எனது அரசாங்கத்துக்கும் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இந்தியாவுக்கு நிறைய ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை இருக்கிறது. அனைவரும் இந்தியாவுக்கு உதவ நிதி திரட்டுங்கள். இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கக் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் இதுவரை ஒன்றாக இருக்கிறோம். இனியும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த சில அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், இந்தியாவுக்கு ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாகப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகின்றனர். அக்தரின் இந்த முயற்சிக்குப் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் இந்திய நெட்டிசன்கள் பலரும் நீங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போதெல்லாம் உங்களை எப்படி எல்லாம் திட்டி இருப்போம். ஆனால் உள்ளதால் நீங்கள் உயர்ந்து விட்டீர்கள் என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்
