கல்யாணம்னு ஒன்னு நடந்தா அவர்கூட தான்.. 10 வருஷ காத்திருப்பு.. இந்திய இளைஞரை கரம்பிடிக்க ஸ்வீடனில் இருந்து பறந்து வந்த இளம்பெண்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக காதலுக்கு இனம், மொழி, தேசம் ஆகிய எல்லைகள் கிடையாது என பலர் சொல்லி கேட்டிருப்போம். சில சம்பவங்களையும் பார்த்திருப்போம். அதனை மீண்டும் மெய்ப்படுத்தும் விதமாக உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு திருமணம் நடைபெற்று இருக்கிறது.

Image Credit : ANI
Also Read | "இவங்க நம்பர் அனுப்புங்க".. ஒரே வீடியோவில் ட்ரெண்டான பெண்.. உதவி செய்ய காத்திருக்கும் நடிகர் சோனு சூட்..!
உத்திர பிரதேச மாநிலத்தின் எட்டா பகுதியைச் சேர்ந்தவர் பவன் குமார். இவர் டேராடூனில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இவருக்கும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டன் லிபெர்ட் என்ற பெண்மணிக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. வெகு சீக்கிரத்திலேயே இருவரும் நல்ல நண்பர்களாக மாறியுள்ளனர். இந்த நட்பு சில ஆண்டுகளில் காதலாகவும் பரிணாமத்து இருக்கிறது.
Image Credit : ANI
10 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர். அதன்படி கடந்த ஆண்டு ஸ்வீடனில் இருந்து இந்தியா வந்திருக்கிறார் கிறிஸ்டன். இருவரும் தாஜ்மஹாலில் வைத்து முதன் முதலில் சந்தித்திருக்கின்றனர். அப்போதே திருமணம் செய்து கொள்வது பற்றி பேசி இருவரும் முடிவு எடுத்து இருக்கின்றனர். பவன் குமார் தனது பெற்றோரிடம் இது பற்றி பேசி சம்மதமும் வாங்க திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று இருக்கிறது.
Image Credit : ANI
அதன்படி ஜனவரி 27ஆம் தேதி இந்திய மரபுப்படி பவன் குமார் - கிறிஸ்டன் தம்பதி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தம்பதியை மனதார வாழ்த்தினர். ஒவ்வொரு முறை தான் இந்தியா வரும் போதும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த திருமணம் தனது வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமைந்திருப்பதாகவும் கிறிஸ்டன் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ நெட்டிசன்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | T20 : ஒரு BALL -ல கூட இது நடக்கலயே..!!.. INDvNZ போட்டியில் நடந்த வினோதம்.. Trending

மற்ற செய்திகள்
