ஒமைக்ரானைத் தொடர்ந்து மற்றொரு புது ரகம்..!- பிரான்ஸில் கண்டறியப்பட்ட IHU வைரஸ்
முகப்பு > செய்திகள் > உலகம்ஒமைக்ரான் வைரஸைத் தொடர்ந்து தற்போது IHU என்னும் புது வைரஸ் ரகம் பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் ஒரு வகையான ஒமைக்ரான் குறித்தே நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அதற்குள் அடுத்த ரகமான IHU வைரஸ் பாதிப்பு பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு தொடங்கிய கொரோனா போராட்டம் 2022-ம் ஆண்டிலாவது முடிந்து வைரஸ் இல்லா வாழ்க்கையை நாம் வாழத் தொடங்கலாம் எனப் பலரும் நம்பி கொண்டிருந்தோம்.
ஆனால், கொரோனா வைரஸின் பல்வேறு ரக வைரஸ் மற்றங்களும் தொடர்ந்து பரவத் தொடங்கி உள்ளன. இதுகுறித்து இந்திய மருத்துவர்கள் கூறுகையில், ‘டெல்டா ரக வைரஸ் இந்தியாவில் பரவினாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஆனாலும், டெல்டாவின் இடத்துக்கும் ஒமைக்ரான் வைரஸ் வந்து தற்போது மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது’ என்கின்றனர்.
முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் ரக வைரஸ் தற்போது பல நாடுகளுக்கு பரவி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் தற்போது IHU என்னும் வைரஸ் பாதிப்பு 12 பேரை பாதித்து உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கேமரூன் என்ற நாட்டுக்கு பயணம் செய்து திரும்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உலக சுகாதர நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் IHU என்னும் புது ரக வைரஸ் வேறு எந்த நாடுகளிலும் கண்டறியப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் ரக வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 1,892 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகப்பட்சமாக மஹாராஷ்டிராவில் 568 பேர் உள்ளனர்.