தல தல தான்யா.. தோனி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஆடிப் போன பாகிஸ்தான் வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jan 08, 2022 01:30 PM

எம்.எஸ். தோனியின் அசத்தல் சர்ப்ரைஸ் ஒன்றால், பாகிஸ்தான் இளம் வீரர் ஒருவர், இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போயுள்ளார்.

ms dhoni gifts his jersey to pakistan player haris rauf

இந்திய அணியின் முன்னாள் வீரரான எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதும், அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் ஒரு சதவீதம் கூட குறையவில்லை.

கடந்த 2004 ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார் எம்.எஸ். தோனி. தனது அதிரடி ஆட்டம் மற்றும் விக்கெட் கீப்பிங் திறனால், ஆரம்ப காலத்திலேயே பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

வரலாறு படைத்த தோனி

தொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு, எம்.எஸ். தோனி தலைமையில், இந்திய அணி டி 20 உலக கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்திருந்தது. அதே போல, 28 ஆண்டுகளுக்கு பிறகு, ஐம்பது ஓவர் உலக கோப்பையை இந்திய அணி, கடந்த 2011 ஆம் ஆண்டு, தோனியின் தலைமையில் கைப்பற்றி, வரலாறு படைத்திருந்தது.

ms dhoni gifts his jersey to pakistan player haris rauf

சிறந்த கேப்டன்

இந்திய அணி கண்ட சிறந்த கேப்டன் என தோனியை பலரும் பாராட்டினர். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, எம்.எஸ். தோனி தொடர்ந்து ஆடி வருகிறார். 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை, சென்னை அணி கைப்பற்றியிருந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரிலும், தோனியை சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ms dhoni gifts his jersey to pakistan player haris rauf

தோனியின் தீவிர ரசிகர்

ஐபிஎல் தொடர்களில் தோனி ஆடி வரும் போது, எதிரணியில் உள்ள இளம் வீரர்கள் கூட, தோனியிடம் அதிக அனுபவங்களை அறிந்து கொள்வார்கள். அதே போல, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப், தோனியின் மிகப் பெரிய ரசிகர். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், பாகிஸ்தான் சர்வதேச அணிக்காக ஆடி வரும் ஹாரிஸ் ராவுஃப், குறுகிய காலத்திலேயே மிகச் சிறந்த பவுலர் என்ற பெயரை எடுத்துள்ளார். அதே போல, பலமுறை தன்னை தோனியின் ரசிகர் என்றும் பதிவு செய்துள்ளார்.

ms dhoni gifts his jersey to pakistan player haris rauf

தோனியின் அசத்தல் கிஃப்ட்

ஹாரிஸ் ராவுஃப்  தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும், பிக் பேஷ் தொடரில், மெல்போர்ன் அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில், எம்.எஸ். தோனி, ஹாரிஸ் ராவுஃபிற்கு  இன்ப அதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளார். அதாவது, ஆட்டோகிராஃபுடன் கூடிய தனது சிஎஸ்கே ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார்.

ms dhoni gifts his jersey to pakistan player haris rauf

தல தல தான்

இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவு ஒன்றை ஹாரிஸ் ராவுஃப் மகிழ்ச்சியுடன் செய்துள்ளார். அதில், 'லெஜண்ட் மற்றும் கேப்டன் கூல் எம்.எஸ். தோனி, அவரது ஜெர்சியை பரிசாக அனுப்பி கவுரவத்தைக் கொடுத்துள்ளார். அவருடைய குணம் மற்றும் சிறந்த சைகைகளால், நம்பர் 7 இன்னும் இதயங்களை வென்று கொண்டு தான் இருக்கிறது' என தெரிவித்துள்ளார். மேலும், சென்னை அணியின் மேனேஜரை குறிப்பிட்டு, 'உங்களின் அன்பான ஆதரவிற்கு மிக்க நன்றி' என்றும் கூறியுள்ளார்.

 

 

கவனம் ஈர்க்கும் தோனி

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள், தோனியின் கேப்டன்சி மற்றும் ஆட்டத் திறன் மூலம் ஈர்க்கப்பட்டு, அவரைப் போலவே ஆக வேண்டும் என விருப்பப்பட்டு வருகின்றனர். அந்த நிலையில், பாகிஸ்தான் அணி வீரர் ஒருவர், தோனியின் ரசிகராக இருந்து, தற்போது அவரது ஜெர்சியையே பரிசாகவும் பெற்றுள்ளது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Tags : #MS DHONI #CSK #HARIS RAUF #JERSEY #எம்.எஸ். தோனி #ஹாரிஸ் ராவுஃப் #சிஎஸ்கே

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ms dhoni gifts his jersey to pakistan player haris rauf | Sports News.