இதுதான் ரியல் சதுரங்க வேட்டை.. 500 போட்டேன் 1000 கிடைச்சது.. இரட்டிப்பு ஆசையால் மொத்தமாக ஏமாந்த கிராம மக்கள்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pandidurai T | Jan 08, 2022 01:25 PM

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள கட்மூர் கிராம மக்கள் வாட்ஸ் அப்பில் வந்த குறுஞ்செய்தியை நம்பி பணத்தை இரட்டிப்பாக்க நினைத்து லட்சக் கணக்கில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

People obsessed with Sathuranga Vettai movie style in Telangana

தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் சதுரங்க வேட்டை படத்தில் வரும் காட்சியை ஞாபகப்படுத்துகிறது. ஒருவனுக்கு பணத்து மேல ஆசை வரனும்னா, முதலில் அவனுக்கு ஆசையை தூண்டனும்.அந்த ஆசை பணம், பொருள் எது வேண்டும் என்றாலும் இருக்கலாம்.

அதேபோன்று இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. கட்மூர் கிராமத்தை சேர்ந்த சிலருக்கு ஒரு நிறுவனத்தின் பேரில்  வாட்ஸ் அப் மூலம் வந்த குறுஞ்செய்தியில் மொபைல் செயலிக்கான ஆப் ஒன்று வந்தது. ஆனால் அந்த செயலி அந்த கிராமத்திற்கே நாமம் போட வந்தது என நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். வடிவேல் சொல்வது போல் இது என்ன பிரமாதம் நீங்க எதிர்பார்த்ததை விட ஒன்று நடக்கும்.

People obsessed with Sathuranga Vettai movie style in Telangana

வாட்ஸ் அப் மூலம் வந்த செயலியை பதிவிறக்கம் செய்ததில் நீங்கள் இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி பலரும் முதலில் ரூ.500 வரை முதலீடு செய்தனர். அதில் குறிப்பிட்டது போன்று அவர்கள் முதலீடு செய்யப்பட்ட பணம் இரட்டிப்பாக்கி வந்துள்ளது. இதனையடுத்து இந்த செய்தி அந்தக் கிராமம் முழுவதுமே அந்த செயலியின் புகழ் பரவத் தொடங்கியது.

புதுசா வீடு கட்ட போறீங்களா.. மணல் விற்பனைக்கு.. அரசு வெளியிட்ட சூப்பர் விதிமுறைகள்

ஒரு தீக்குச்சி போன்று இருந்த செய்தி தீப்பந்தமாய் மக்களின் பேச்சாகவே இருந்தது. கிராம மக்கள் அனைவரும் முதலீடு செய்ததில் இரட்டிப்பாக வந்தது. இதனை தொடர்ந்து லட்சக் கணக்கில் முதலீடு செய்ய தொடங்கினர். ஆனால் இந்த முறை அவர்கள் எதிர்பார்த்தபடி முதலீடு செய்த பணம் இரட்டிப்பாகவில்லை. இதுகுறித்த செய்தியும் வராததையடுத்து கிராம மக்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

People obsessed with Sathuranga Vettai movie style in Telangana

பின்னர் கட்மூர் கிராம மக்கள் காவல்துறையினரிடம் இதுதொடர்பாக புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரு வாட்ஸ் அப் மூலம் வந்த செயலியால் கிராம மக்களே ஏமாந்து போன செய்தி அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

எவ்ளோ பெரிய கொடும தெரியுமா அது.. சின்ன பசங்க என்ன நெனப்பாங்க??..உடைந்து போன வார்னர்

People obsessed with Sathuranga Vettai movie style in Telangana

Tags : #SATHURANGA VETTAI

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. People obsessed with Sathuranga Vettai movie style in Telangana | India News.