கர்ப்பமா இருக்குறப்போவே திரும்பவும் கர்ப்பம்.. அமெரிக்க பெண்ணுக்கு நடந்த அதிசயம்.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jun 02, 2022 04:05 PM

நம்மை சுற்றி இந்த உலகில் நடக்கும் பல விஷயங்கள், வழக்கமான ஒன்றாக இருக்கும் நிலையில், சில விஷயங்கள் சற்று விநோதமாகவும், அதே வேளையில் ஆச்சரியம் நிறைந்தும் இருக்கும்.

america 30 yr old woman becomes pregnant while being pregnant

Also Read | கன்னியாகுமரி அருகே கல்யாணத்துக்கு முன் ‘ஷாக்’ கொடுத்த மணப்பெண்.. உடனே மணமகன் வீட்டார் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கு நடந்த நிகழ்வும், அதன் பின்னர் நடந்த ஒரு விஷயமும், பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த காரா வின்ஹோல்டு (Cara Winhold) என்ற பெண்மணிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிகழ்ந்துள்ளது. இதன் பின்னர், அந்த தம்பதியருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மனம் தளராத தம்பதி

இதனைத் தொடர்ந்து, மீண்டும் குழந்தையை பெற்றுக் கொள்ள, காரா மற்றும் அவரது கணவர் முடிவு செய்துள்ளனர். ஆனால், அடுத்தடுத்து மூன்று முறை, காராவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இதனால், தம்பதியினர் சற்று மனம் கலங்கி போயுள்ளனர். ஆனாலும், மனம் தளராமல், மீண்டும் குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

america 30 yr old woman becomes pregnant while being pregnant

Superfetation என்றால் என்ன?

அதன் படி, கடந்த ஆண்டில் மீண்டும் கருவுற்றுள்ளார் காரா. இந்நிலையில், அவர் கர்ப்பமாக இருக்கும் போதே, அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார் காரா. இதனால், அவர்கள் ஆச்சரியத்தில் உறைய, இந்த மருத்துவ நிலைக்கு சூப்பர்ஃபெடேஷன் (Superfetation) என்று பெயர் உள்ளது. ஏற்கனவே ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் காலத்தில், மீண்டும் கர்ப்பம் ஏற்பட்டால், அது சூப்பர்ஃபெடேஷன் என அழைக்கப்படுகிறது.

இதன்படி, முதல் கர்ப்பம் ஆனதில் இருந்து, சில நாட்கள் அல்லது சில வாரங்கள் கழித்து இது நிகழலாம் என்றும் தெரிகிறது.  இரண்டு முறை கருவுற்று, கர்ப்பமாக இருந்த காரா வின்ஹோல்டிற்கு, தற்போது இரண்டு ஆண் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. மேலும், இந்த இரண்டு குழந்தைகளும் ஆறு நிமிட இடைவெளியில் பிறந்துள்ளன.

100 சதவீதம் அதிசயம் தான்

இதுகுறித்து பேசிய காரா, "என்னுடைய கர்ப்ப பயணத்தில் நடந்தவை அனைத்தும், அதிசயம் என 100 சதவீதம்  நான் நம்புகிறேன்" என பேரானந்தத்தில் தெரிவித்துள்ளார். மூன்று முறை கர்ப்பம் அடைந்தும், கருச்சிதைவு காரணமாக குழந்தை பெறும் வாய்ப்பை இழந்த காராவுக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம், பலருக்கும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.

Also Read | "கங்குலி Resign பண்றாரா??.." ஒரே ஒரு ட்வீட்டால் எழுந்த குழப்பம்.. கடைசியில் அவரே கொடுத்த விளக்கம்

Tags : #AMERICA #OLD WOMAN #PREGNANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. America 30 yr old woman becomes pregnant while being pregnant | World News.