சொந்த காசுல FORIEGN போன பாட்டி.. 65 வருஷ கனவை நிறைவேற்றிய நிஜ சிங்கப்பெண்.. நெகிழ்ச்சி தருணம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்வயதான பாட்டி ஒருவர், தன்னுடைய நெடுநாள் ஆசையான வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதை தற்போது நிறைவேற்றியிருக்கிறார். இது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் நெட்டிசன்கள் அவரது விடாமுயற்சியை பாராட்டி வருகின்றனர்.

பொதுவாகவே சுற்றுலா செல்வது பலரும் பிடிக்கத்தான் செய்கிறது. அன்றாட வேலை சுமைகள், இரைச்சல்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு நீண்ட பயணத்தை மேற்கொள்ள விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். ஆனால், அதுவே வெளிநாடு என்றால் பெரும்பாலும் பட்ஜெட் காரணமாக பலரும் நோ சொல்லிவிடுவார்கள். இருப்பினும், நம் வாழ்வில் வெகு சிலர் மட்டுமே, தங்களது ஆசைகளை லட்சியங்களாக மாற்றி, அதை நோக்கி தம் வாழ்வின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பார்கள்.
அப்படியானவர்களுள் ஒருவர் தான் மீனம்மா. 75 வயதான இவருக்கு சிறுவயதில் இருந்தே வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. திருமணம் ஆன பின்னர் குடும்பம், குழந்தைகள் என அவரது வாழ்க்கை மாறினாலும் அவர் தனது கனவுகளை விட்டுத்தர தயாராக இல்லை. கணவர் மறைந்த பிறகு தனியாக தனது குழந்தைகளை கவனித்துக்கொண்ட மீனம்மா, அவர்களை சமூகத்தில் நல்ல அந்தஸ்திற்கும் உயர்த்தியுள்ளார்.
கடந்த 52 வருடங்களாக ஒற்றை தாயாக தனது குழந்தைகளை கவனித்துக்கொண்டு வந்த மீனம்மாவிற்குள் வெளிநாட்டு சுற்றுலா தாகம் அடங்கியதே இல்லை. அதற்காக சிறுக சிறுக பணம் சேர்த்து வந்த அவர் தற்போது அந்த ஆசையை பூர்த்தி செய்தும் இருக்கிறார். தனது சொந்த காசில் வெளிநாட்டிற்கு பயணம் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளார் அவர்.
இந்நிலையில், வெளிநாட்டிற்கு மீனம்மா பாட்டி சுற்றுலா சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைரலாக சேர் செய்வதுடன், மீனம்மா பாட்டியின் விடா முயற்சியையும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
