குப்பை அள்ளி வந்த 75 வயசு 'மூதாட்டி'.. ஒரே நாளில் வாழ்க்கையை தலைகீழா மாத்திய வாலிபர்!!.. ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்று இணையத்தில் அதிக நேரம் உலவிடும் நாம் அதன் மூலம் நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை நன்கு தெரிந்து கொள்ளவும் முடிகிறது.

மேலும் இப்படி வைரல் ஆகும் விஷயங்களில் மனிதாபிமானம் கலந்த வகையில் இருப்பவை, நிச்சயம் நம்மில் ஒருவித தாக்கத்தை உருவாக்கும்.
அத்துடன் அவை மனதில் இருந்து விலகுவதற்கு கூட சில நேரம் எடுத்துக் கொள்ளும். அதே போல, மனிதநேயத்தை என்ன வந்தாலும் இனி ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூட நம்மை நினைக்க வைக்கும்.
அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, பலரையும் மனம் உருக வைத்து வருகிறது. ஐஏஎஸ் அதிகாரியான அவானிஷ் சரண், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். முன்னதாக இந்த வீடியோ தருண் மிஸ்ரா என்ற வாலிபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
அவானிஷ் பகிர்ந்துள்ள வீடியோவின் படி, சுமார் 75 வயதாகும் மூதாட்டி ஒருவர் குப்பை கிடங்கில் இருந்து துணி உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. இது பற்றி ஒருவர் கேட்கும் போது, அதில் கிடைக்கும் குப்பை பொருட்களை விற்று அதில் வரும் பணம் மூலம் பிழைப்பை பார்த்து வருவதாக மூதாட்டி குறிப்பிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தள்ளாடும் வயதில் இருக்கும் இந்த மூதாட்டியின் நிலையைக் கண்ட தருண் மிஸ்ரா, அவருக்கு உதவி செய்யவும் முடிவு செய்கிறார். இதற்காக, தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை கடை ஒன்றை தொடங்கி கொடுக்க தருண் திட்டம் போட்டு அதற்காக எடை போடும் மெஷின், காய்கறி வண்டி, ப்ரெஷ் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுக்கிறார்.
குப்பை பொருட்களை பொறுக்கி அதில் வருமானம் பார்த்து வந்த மூதாட்டிக்கு தள்ளுவண்டி காய்கறி கடையை வாலிபர் உருவாக்கி கொடுத்துள்ளது தொடர்பான வீடியோவை அவானிஷ் பகிர்ந்துள்ளார்.
Humanity.🙏🙏🙏 pic.twitter.com/NUZTGEB6Cp
— Awanish Sharan (@AwanishSharan) October 18, 2022
"மனிதநேயம்" என கேப்ஷனில் அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், மூதாட்டியின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய வாலிபரை பலரும் கமெண்ட்டில் தங்களின் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
