ஒரு பக்கம் ரஷ்யா-உக்ரைன் போர் நடந்திட்டு இருக்கு.. சத்தமில்லாமல் பெரிய சம்பவத்தை செஞ்ச வட கொரியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியா அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. அதன்படி நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
முற்றிலும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இதற்குமுன் வடகொரியா வெற்றிகரமாக சோதித்து பார்த்திராத வகையில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையிலான Hwasong-17 என்ற ஏவுகணையை தலைநகர் பியாங்யாங் விமான நிலையத்தில் இருந்து செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏவுகணையானது 6200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அளித்து ஜப்பான் கடற்பரப்பில் விழுந்ததாகவும், 2017-ம் ஆண்டுக்கு பின் வட கொரியா சோதித்த சக்தி வாய்ந்த ஏவுகணை இதுதான் என தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்புக்கு பின் நீண்ட தூர ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபடவில்லை. இந்த சூழலில் மீண்டும் வடகொரியா இதுபோன்ற ஏவுகணை சோதனையில் வட கொரியா ஈடுபட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், வட கொரியா ஏவுகணை சோதனை செய்தது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனையானது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனிப்பட்ட கவனிப்பில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.