“வடகொரியா வரும் சீனர்களை சுட்டுத்தள்ள உத்தரவா?”.. மீண்டும் படைத்தளபதி அளித்துள்ள பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்முதன் முதலில் கொரோனா வைரஸ் தோன்றிய சீன நாட்டில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு கிம் உத்தரவிட்டுள்ளதாக, தென்கொரியாவில் இருக்கும் அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார்.

உலகமே கொரோனாவால் கதிகலங்கிக் கொண்டிருக்க, வடகொரியாவில் மட்டும் கொரோனா பாதிப்புகள் குறித்த ஒரு விபரமும் வெளியாகாத சூழலில் அங்கு கொரோனா பரவலுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் கொரோனா பரவலை தொடர்ந்து ஜனவரி மாதம் சீனாவுடனான எல்லையை வடகொரியா மூடியதாகவும், கடந்த ஜூலை மாதம் இப்படி ஒரு அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாகவும், கிம் உத்தரவிட்டுள்ளதாக தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி ராபர்ட் அம்ரம்ஸ் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, சீனாவிலிருந்து வடகொரியாவுக்கு நுழைபவர்களை சுட்டுத் தள்ளுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக அம்ரம்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் முன்னதாகவே கூறப்பட்டாலும், வடகொரிய அரசு ஊடகம் தரப்பில் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. முன்னதாக வடகொரிய எல்லைப்பகுதியான, கேசாங்கில் கொரோனா அறிகுறிகளுடன் நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதால், வடகொரிய அதிபர் அதிபர் கிம் ஜாங் எல்லைகளை மூட உன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
