‘இந்த தப்ப மட்டும் செஞ்சு பாருங்க!’.. ‘அப்புறம் இருக்கு எல்லாருக்கும்!’.. நாட்டு மக்களை எச்சரித்த கிம்! எதுக்காக தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் எச்சரித்துள்ளார்.

வடகொரியாவில் அடுத்தடுத்து வந்த 3 புயல்களால் வடகொரியா பெருமளவில் துவண்டு போனது. ஆனால் அந்த அலையில் இருந்து மீள்வதற்குள், அடுத்த அலையாக கொரோனா வந்தது. கொரோனா தாக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடை நிலைமையை இன்னும் கடினமாக்கியது. இதனால் கடுமையான உணவுத் தட்டுப்பாடு அந்நாட்டில் ஏற்பட்டது.
இந்நிலையில்தான், உணவை வீணடிப்பது பொருளாதாரத்தை வீணடிப்பதற்குச் சமம் என்று கருத்து தெரிவித்துள்ளதுடன், உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் கிம் எச்சரித்துள்ளார்.
அத்துடன் எந்த நிகழ்வில் எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்றொரு பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
