வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனாவா? இந்திய அணியில் திடீர் மாற்றம்.. களமிறங்கிய வீரர் யார்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா - தென்னாப்பிரிக்கா விளையாடுகின்றன. இந்நிலையில் பெங்களூருவில் பயிற்சி முகாமிலிருந்த வாஷிங்டன் சுந்தருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் திட்டமிட்டபடி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற அச்சம் எழுந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த அச்சத்தினை நிவர்த்தி செய்துள்ளது.
ஜெயந்த் யாதவிற்கு வாய்ப்பு
வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு பேக்-அப் வீரராக நவ்தீப் சைனி ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சிராஜ், தசைபிடிப்பு காரணமாக தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
NEWS - Jayant Yadav & Navdeep Saini added to ODI squad for series against South Africa.
More details here - https://t.co/NerGGcODWQ #SAvIND pic.twitter.com/d14T9j3PgJ
— BCCI (@BCCI) January 12, 2022
ராகுல் கேப்டன்
இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 19-ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. இதற்கு இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியல் கீழ்வருமாறு:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சாஹல், அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், சிராஜ், ஜெயந்த் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி.