"எது, ஒரு பிளேட் FRENCH FRIES விலை 15,000 ரூபாயா??.." மூக்கு மேல விரல் வெச்ச மக்கள்.. "கின்னஸ் சாதனை வேற பண்ணி இருக்காமே.."
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, ரெஸ்டாரண்ட் செல்லும் பலராலும் அதிகம் விரும்பி சாப்பிடும் Snacks வகைகளில் ஒன்று, French Fries.

உருளைக்கிழங்கு மூலம் தயாரிக்கப்படும் இந்த உணவு வகை, சற்று குறைந்த விலையில், கடையில் வாங்கி உண்ணக் கூடிய தின்பண்டம் ஆகும். அதே போல, பலரும் வீட்டில் கூட இதனை எளிதாக உருவாக்கி உண்பார்கள்.
ஆனால், அப்படிப்பட்ட ஒரு எளிதான உணவான பிரெஞ்சு ப்ரைஸ், 15,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது என்றால் பலராலும் நம்ப முடியாமல் தான் பார்க்கிறார்கள்.
15,000 ரூபாய்க்கு பிரெஞ்சு ப்ரைஸா?
சாதாரண உருளைக்கிழங்கு மூலம் உருவாகும் இந்த பிரெஞ்சு ப்ரைஸ், ஏன் இத்தனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற கேள்வியும் பலருக்கு எழலாம். இதற்கான காரணம் என்ன என்பதை விவரிக்கிறது செய்தித் தொகுப்பு.
அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில், Serendipity என்ற ஒரு ரெஸ்டாரண்ட் உள்ளது. இங்கே தான், ஒரு பிளேட் பிரெஞ்சு ப்ரைஸ் சுமார் 200 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 15,800 ரூபாய்) விற்பனை செய்யப்பட்டுள்ளது. உலகத்திலேயே அதிக விலைக்கு விற்கப்படும் பிரெஞ்சு ப்ரைஸ் என்ற கின்னஸ் உலக சாதனையையும் இந்த Serendipity உணவகத்தின் பிரெஞ்ச் ஃப்ரைஸ் படைத்துள்ளது.
விலையின் காரணம் என்ன?
விலை உயர்ந்த மற்றும் அதிக தரமுள்ள உருளைக்கிழங்குகள், Vintage 2006 Champagne, ஸ்பெஷல் சீஸ், வெண்ணெய், 23 காரட் தங்க தூசி உள்ளிட்ட பல மதிப்பு மிக்க பொருட்களால், இந்த பிரெஞ்சு ப்ரைஸ் உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான வீடியோ ஒன்று, கின்னஸ் உலக சாதனையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த பிரெஞ்சு ப்ரைஸ் விலையைக் கேட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தைச் சேர்ந்தவர்களும் மிரண்டு போனதாக கூறப்படுகிறது. மேலும், ஜூலை 13 ஆம் தேதி, தேசிய பிரெஞ்சு ப்ரைஸ் தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில், மீண்டும் உலகின் விலை உயர்ந்த பிரெஞ்சு ப்ரைஸ் விற்பனைக்கு வரும் என அந்த உணவகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மற்ற செய்திகள்
