“ஓ.. ஹோ.. ஹோ.!”.. தூத்துக்குடி நபரிடம், “வணக்கம் நல்லா இருக்கீங்களா?” என தமிழில் உரையாடிய பிரதமர் மோடி, ‘ஆச்சர்யமாக சிரித்தது’ ஏன் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாமனதின் குரல் என்னும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது, பண்டிகை காலத்தில் கொரோனாவில் இருந்து ஜாக்கிரதையாக இருத்தல், உள்ளூரில் உற்பத்தி செய்த பொருட்களை வாங்குதல், கொரோனா தொற்று விவகாரம் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருத்தல், ராணுவ வீரர்களை நினைத்து பார்த்தல் என பல விஷயங்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி, தொடர்ந்து, தமிழகத்தின் தூத்துக்குடியை சேர்ந்த சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பனுடன் உரையாடினார்.
அதில், “பொன் மாரியப்பன் ஜி.. வணக்கம் நல்லா இருக்கீங்களா? உங்களுக்கு இந்த லைப்ரரி ஐடியா எப்படி வந்தது? உங்களுக்கு எந்த புத்தகம் பிடிக்கும்? உங்களிடம் பேசியது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நல்வாழ்த்துக்கள்!” என பேசினார். அவரிடம் பொன் மாரியப்பனும் தமிழில் உரையாடினார். இடையில், தனக்கு திருக்குறள்தான் பிடித்த புத்தகம் என பொன்.மாரியப்பன் கூறியதை கேட்ட பிரதமர் மோடி, “ஓ.. ஹோ..ஹோ.” என ஆச்சரியமாக புன்னகைத்தார்.

மற்ற செய்திகள்
