இதுக்கு ஒரு முடிவே இல்லையா...! 'அந்த 2 வகையான இறைச்சில கொரோனா பரவுது...' - அடுத்த குண்டை தூக்கி போட்ட சீனா...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் இருந்து உலகநாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சிகள் மூலம் மீண்டும் சீனாவிற்குள் பரவுவதாக அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதய உலகமே அதன் இயல்பு செயல்பாடுகளில் இருந்து விலகி முகக்கவசம் சானிடைசர் கையோடு அலைந்து கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ். தொடக்ககாலத்தில் சீனா பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அந்நாட்டில் இயல்புநிலை திரும்பிக்கொண்டிருக்கிறது எனலாம்.
இந்நிலையில் சீனாவில் இறக்குமதியான பதப்படுத்தப்பட்ட மாட்டு இறைச்சியில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகளவில் இருப்பதாக அந்நாட்டு அரசு பிற நாடுகளை எச்சரித்து வருகிறது.
பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சியை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடு சீனா. அதன்காரணமாக பிரேசில், நியூசிலாந்து, பொலிவியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியான பதப்படுத்தப்பட்ட மாட்டு இறைச்சியில் கொரோனா வைரஸ் இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த வாரம் லாங்ஸூ நகரில் சவுதி இறால் கறியிலும், வுஹான் நகரில் பிரேசிலின் மாட்டு இறைச்சியிலும், ஷாங்டாங் மற்றும் ஜியாங்சு மாகாணங்களில் அர்ஜெண்டினாவின் மாட்டு இறைச்சியிலும், ஸெங்ஸுவு நகரில் அர்ஜெண்டினாவின் பன்றி இறைச்சியிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை சீன அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். சீனாவில் இறைச்சி இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் குவடாய் இண்டர்நேஷனல் குரூப், ஷாங்காய் ஸோங்லி டெவலப்மெண்ட் ட்ரேட் ஆகிய அமைப்புகளின் அங்கமாக இருக்கிறது என தி ஜினான் முனிசிபல் ஹெல்த் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இனி தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.